கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

உள்ளேயோ அந்தராத்மா உட்கார்ந்து கீதைகேள்
புள்வா கனரோ புராணவிஷ்ணு, -வெள்ளேயோ
அந்தராம் கோதெண்டம் கொண்டுள்ளார் கொல்நூறை
பந்தர்வான் ஈசர்(அனுமார் ருத்ராம்சம்) பறப்பு….கிரேசி மோகன்….!
‘அங்கிருஷ்டாப்யாம் அந்தரிதாயி’’…..!
————————————————————————————
வீணாய் இலைகளும் வேர்களும் இல்லாது
தானாய் முளைக்கும் மரமிவர் -நானார் ?
உரலில் தலைவிட்டு ஓவென்(று) அழுதால்
விரலளவு ஆகும் வியப்பு….கிரேசி மோகன்….!