கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலர்
கடிக்கும் கராமதன்(முதலை) காதில்பூ வைக்க
துடிக்கும் துதிக்கை(கஜேந்திரர்) தொடுப்பு….!
(அல்லது)
பாலுக்கும் காவலாய் பூனைக்கும் தோழனாய்அப்
பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும் -மாலர்
பழகிடப் பூனையே, பாய்ந்தால்(போருக்கு) புலியே
அழகிய சிங்கா அருள்….கிரேசி மோகன்…..!