அறிவிப்புகள்இலக்கியம்கட்டுரைகள்

ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர்!

பவள சங்கரி

 

விவேக் பாரதி, “கல்லூரி பயிலும் இளம் மரபு கவிஞர்” துபாய் தமிழர் சங்கத்தின் மூலம் “வித்தக இளங்கவி” என்ற பட்டம் பெற்றவர். “மகாகவி ஈரோடு தமிழன்பன்” விருது பெற்றவர். “முதல் சிறகு” என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். பாரதி மேலே தீராத பற்று கொண்ட இளைஞர். மரபுக் கவிதைகள் மேல் வளர்த்த காதலால் கவிதை பாடும் கவிஞர்.

ஆர்வமும் திறனும்:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், கட்டுரைகள் எழுதும் திறன்.
தமிழ் இலக்கியத்திலும் மரபு இலக்கணத்திலும் ஆர்வம்.

பட்டங்கள், விருதுகள் :

1) வித்தக இளங்கவி பட்டம் (2015)
2) தமிழன்பன் – 80 விருது (2015)
3) பைந்தமிழ்ப் பாமணி பட்டம் (2016)
4) பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017)
5) ஆசுகவி பட்டம் (2017)

படைப்புகள்:

1) யானைமுகனான கதை (மின்னூல்) (2015)
2) முதல் சிறகு (2016)
3) பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை (2017)
4) ககனத்துளி (2018)
5) பேசுபொருள் நீயெனக்கு (2018)

வல்லமை ஆசிரியர் குழுவில் இணையும் கவிஞர் விவேக் பாரதியை வாழ்த்தி வரவேற்கிறோம்.

Print Friendly, PDF & Email
Share

Comments (4)

 1. Avatar

  என்னுற்றான் கொல்லெனும் சொல்! என்பதை நிரூபிக்கும் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்!  வல்லமை சேர நல்லவர் வாழ நலமுடன் இணைத்த அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்தும், நன்றியும் உரித்தாகுக!

  அன்புடன்
  சுரேஜமீ

 2. Avatar

  திறமையும் துடிப்பும் ஆர்வமும் மிக்க வித்தக இளங்கவி விவேக் பாரதியை உளமார வரவேற்கிறோம்.

 3. Avatar

  இளங்கவிக்கு வாழ்த்துக்கள்

 4. Avatar

  வித்தகர்களின் வியன்தமிழின்
  புத்தம்புதிய படைப்புகளுள்
  சத்தமாகச் சங்கமமாகிறார்
  வித்தகரொருவர்! வரவு-வாழ்க

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க