செந்நிறக் கங்குகள்
கவிஞர் இரமேஷ் அர்ஜூன்
வார்த்தைகளில்
உறைந்து கிடக்கும்
உண்மைகள்
சிலபோது
உருகும் பனிக்கட்டியாக
உருகிய உண்மைகள்
உள்வெளியில்
வெந்நீரின் ஆவியில்
புயலெனப் பொக்கிப்
பிரவகிக்கும்
ஆவியில் அழிந்து போகாது
அடையாளம் கொள்கிறது
ஆழ்மன அதிர்வுகள்
செந்நிறக் கங்குகளாக
உண்மை சுட்டுச் செல்கிறது
எனக்கான
பொய்களைக் கடந்து…