181109 Vatsalya – Sepia ink -Canson 200 gsm A4 -72 dpi lr

விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
தனிமரத் தோப்பில் திளைப்பு….!

இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்…

சமர்த்தஅவ் ஆவினை சிந்தா சனத்தில்
அமர்த்தி கிருஷ்ணனாய் ஆளு -நிமிர்த்த
முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
விடியாத நெஞ்சை விலக்கு….!

பசு உவாச….!
==============
எண்ணம் ஒடுங்கிட ஏகாந்தம் கூடிட
கண்ணன் கருநீலக் காயாம்பூ -வண்ணன்
நினைப்பும் நாலுகாலன் நானும் கலக்க,
கனைப்பை மறந்தேனே காண்….!

”மாலோல பாகவதர், மாட்டின் முகம்வருடி
தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -ஏலேலோ
வாழ்க்கையில் சிக்கி வழிதவறும் எங்களை
ஊழ்கையில் சிக்கா(து) உதவு”….கிரேசி மோகன்….!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *