கிரேசி மோகன்

வேலை இருக்குது நிரம்ப -என்னை
வேகப் படுத்திடு தாயே    –
பாலைச் சுரந்திடு தளும்ப – உந்தன்
பாதம் பணிந்திடும் சேய்நான்
ஆலை கரும்பெனெப் பிழிந்து – எந்தன்
ஆவி பிரிந்திடும் முன்னே
சோலை நகைச்சுவைக் காற்றை – இவன்
நாளும் நுகர்ந்திட அருள்வாய்…!

கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
பிறந்தநாள் இன்றவளைப் போற்று….!

உன்னையே நம்பி உனதா யுதமாக
அன்னையே வாழ அருள்புரி -முன்னை
இருந்த நிலையில் பொருந்தி இருக்க
திரும்ப மனதைத் திருத்து….!

பொய்தந்த போதுமதை, மெய்த்தவமாய் மாற்றியிரு,
கைதந்து காத்துக் கரைசேர்க்கும், -சைதன்ய
சக்தியே, அன்னையே, சச்சிதா னந்தத்தின்,
சித்திநாளில், நீக்கென் சழுக்கு (குற்றம்)………!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *