வாழியே தமிழே நீயும் !!

உலக கவிஞர்கள் தினமென்று
தொலைக்காட்சி படித்தது
உலக கவிஞர்கள் தினமின்று
மனசாட்சி இடித்தது
உலக கவிஞர்கள் தினம்-என்று
வல்லமை விரைந்தது – மனம்
உலக கவிஞர்கள் தினமென்றும் (என)
தனைத் தேற்றி கொண்டது

என்ன செய்திங்குக் கிழித்து விட்டேனென‌
பாவலர் வரிகள் மீறும்
இன்றும் களைக்க மாட்டோ மென்றென‌
காவலர் வரிகள் கூறும்
படக் கவிதைப் போட்டிக்கு வாருமென‌
அண்ணாவின் அழைப்பில் சேரும்
படக் கவிதைப் பாராட்டு பாருமென‌
மேகலையின் தேர்வில் தேறும்

ஓயாது ரேஸில் ஓடும் புரவிகளாய்
கிரேஸியின் வெண் பாக்கள்
தேயாது வானில் பாடும் மீன்களாய்
செண்பகப் புது கவிகள்
பாயாது பெருக்கு எடுத்து பாயும்ஜெய‌
பாரதன் தரும் வரிகள்
சாயாது சாய்ந்து கொண்டு ரசிக்க‌
ஜெயசர்மா மரபு கவிகள்

எத்தனை எத்தனைக் கவிகள் வாழும்
இத்தகு வல்லமை இணையம்
அத்தனை அத்தனைச் சிறப்பில் ஆளும்
வாழியே தமிழே இனியும்

1 thought on “வாழியே தமிழே நீயும் !!

 1. சத்திய மணியோசை.

  சி. ஜெயபாரதன், கனடா

  நித்தியக் கவிஞர் தினம்
  சித்தர் காவிய தினம்.
  புத்தம் புதிய படைப்புகள்
  நுட்பங்கள் வல்லமையில்
  பட்டொளி வீசிப் பறக்கும் தினம்
  சத்திய மணியோசை அடித்து
  தரணி நினைவூட்டும் தினம்.

  ++++++++++++

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க