வெறுப்பின் வெப்பப்பூவின் உயிர் கேட்கும் தருணம்
-கவிஞர் பூராம்
கந்தகத்தின் நெடி
மூளையில் ஆணியாக
அறையப்பட்டுவிட்டது!
எத்திசையில் இருந்து
தோட்டாக்கள் இதயம்
பிளக்குமென்ற பயத்தின் உச்சத்தில்
புத்தகத்தின் பக்கங்கள்
வெறுமையில் திருப்பப்படுகின்றன!
யாருமற்ற பேருந்து நி்ன்று
சென்றாலும்
நிற்பதற்கே இடமில்லா பேருந்து
கடந்து சென்றாலும்
நடுங்கி தளர்கிறது பெண்ணுடல்!
பேரன்பின் வசந்த காலம்
என்று வருமோவென
இருந்து கிடக்கிறது
ஆன்மாவின் ஒரு துளி.