2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
நிலவைச் சுற்றிய முதல் சந்திரயான்
உளவிச் சென்று நாசா
துணைக்கோளுடன் தென் துருவத்தில்
ஒளிமறைவுக் குழியில்
பனிப் படிவைக் கண்டது !
நீரா அல்லது வாயுவா என்று
பாரதமும் நாசாவும் ஆராயும் !
சந்திரனில் சின்னத்தை இறக்கியது
இந்திய மூவர்ணக் கொடி !
யந்திரத் திறமை காட்டும் இப்பயணம்
பந்தயமில்லை !
விந்தை புரிந்தது இந்தியா !
இரண்டாம் சந்திரயான் விண்சிமிழ்
2019 செப்டம்பரில்
முதன்முதல் இறக்கும் தளவுளவி
தகவல் இணைப்பு இழந்து,
சரிந்துபோய் விழுந்தது !
மூன்றாம் சந்திரயான் விண்சிமிழ்
நிலவைச் சுற்றி இறக்கும்
மீண்டும் ஓர் தளவுளவி.
மூவர் இயக்கும்
விண்கப்பல் பூமி சுற்றப்
போகிறது 2022ஆம் ஆண்டில் .
+++++++++++
https://www.isro.gov.in/
+++++++++++++++++++++++++
India says it will try again to land on moon in 2020
with Chandrayaan -3
India targets New Moon Mission Chandrayaan -3 in 2020
++++++++++++++++++++++
2020ஆம் ஆண்டில் இந்தியா மீண்டும் சந்திரயான் – 3 அனுப்பி நிலாவில் தளவுளவி, தளவூர்தி இறக்கப் போகிறது.
2019 செப்டம்பரில் வெற்றிகரமாகச் சந்திரயான் -2 நிலவைச் சுற்றி, தளவுளவியைப் பாதுகாப்பாக இறக்கினாலும், நேராக நிற்க இயலாமல், சரிந்து போய் தளவூர்தி நகர்ந்து ஊர்ந்திட முடியாமல் சிக்கிக் கொண்டது. மேலும் தளவுளவி மெதுவாக இறங்கி, நிலவைத் தொடும் முன்பே, தகவல் அனுப்புவது தடைப்பட்டது. ஆகவே சந்திரயான் -2 அனுப்புத் திட்டப்பணி 95% அளவு வெற்றிதான் பெற்றது. இப்போது 2020 ஆண்டில் மேற்கூறிய தவறுகளைத் திருத்த, சந்தியான் -3 புதிய நிலவுப் பயணத்தை இந்தியா மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. அதை 2020 ஜனவரி முதல் தேதியில் அறிவித்தவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி வாரியத் தலைவர் கே. சிவன். திட்டம் நிறைவேறும் மாதம் 2020 நவம்பர் அல்லது 2021 முதல் மாதங்கள். அதற்குச் செலவாகும் நிதித் தொகை : சுமார் 35 மில்லியன் டாலர் என்றும் டாக்டர் சிவன் அறிவித்தார். மேலும் 2022 ஆண்டு நடுவ மாதங்களில் மூன்று விண்வெளி விமானியர் இயக்கும், மனித விண்வெளிச் சிமிழ் பூமியைச் சுற்றிவரும் திட்டம் தயாராகி வருகிறது. அதற்கு நால்வர் இம்மாதம் ரஷ்யாவில் பயிற்சி தொடங்குவார் என்றும், அப்பெரிய நிகழ்ச்சி இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டு பூர்த்தி நினைவாக இருக்கும் என்றும் பெருமையாகக் கூறினார்.
++++++++++++++++++++++++++++++
விக்ரம் தளவுளவி விழுந்த இடம் கண்டுபிடிப்பு
2019 செப்டம்பரில் தவறி விழுந்த சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் மூன்று மாதம் கழித்து நிலவில் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டது. அதைக் கண்டுபிடித்த தமிழர் பெயர் சண்முக சுப்ரமணியன். அவர் ஓர் விண்வெளி ஆர்வலர் [Amateur Space Enthusiast]. 33 வயதானர். பழைய ஐ.ஐ.டி. சென்னை மாணவர். நாசா டிசம்பர் 2 ஆம் தேதி தனது நிலவு உளவிச் சுற்றி [Lunar Reconnaissance Orbiter (LRO] மூலம் செப்டம்பர் 6 இல் கிடைத்த தளப் படமுடன் இந்தச் செய்தியை வெளியிட்டது. நிலாச் சுற்றி அனுப்பிய செப்டம்பர் 17 தளப்படத்தில் விக்ரம் விழுந்த இடம் அறிய முடியவில்லை. அப்படங்களை வைத்துக் கொண்டு சண்முக சுப்ரமணியன் தனது மடிக்கணினிகள் மூலம், சவாலான தளவுளவி விழுந்த இடத்தைத் தேடினார். நாசா அனுப்பிய பழைய படங்கள் ஒரு மடிக்கணனியிலும், புதிய படங்களை அடுத்தோர் மடிக்கணனியிலும் இட்டு ஒப்பு நோக்கினார். நாசா 100% மெய்யாக சரிபார்த்த பிறகுதான், இந்த அரிய கண்டுபிடிப்புச் செய்தியை வெளியிட்டது. இந்தியா ஏவிய சந்திரியான் -2 தளவுளவி நிலவில் பாதுகாப்பாக, வெற்றிகரமாக இறங்கி, ரஷ்யா, அமெரிக்கா, சைனா நாடுகளோடு உலகில் நான்காவது நாடாகப் பெயர் பெற்றுள்ளது. ஆயினும் தளவுளவி சமிக்கை அனுப்பி இன்னும் உரையாட வில்லை. தளவுளவி நேராகித் தளவூர்தியை இறக்கவில்லை.
+++++++++++++++++++++++++
இந்தியச் சந்திரயான் -2 தளவுளவி விக்ரம் இறுதித் தோல்வி முன்னேர்ச்சியில் பெற்ற ஒரு பின்னேர்ச்சி.
2019 செப்டம்பர் 7 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிலவை நோக்கி ஏவிய சந்திரயான் -2 பேரார்வத் திட்டம் 95% வெற்றி அடைந்து, இறுதியில் மெதுவாக இயங்கிய தளவுளவி, நிலவுக்கு மேல் சுமார் ஒரு மைல் உயரத்தில் தகவல் அனுப்பத் தவறி, செங்குத்து நிலை சரிந்து, முறியாமல் விழுந்துள்ளது, உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. சரிந்து நொறுங் காமல், நிலவின் தென் துருவத்தில், திட்டமிட்ட இடத்தில் இறங்கியுள்ள விக்ரம் தளவுளவியைச் சந்திரயான் – 2 இன் விண்சிமிழ் கண்டுபிடித்துள்ளது. அதே சமயத்தில் நிலவைச் சுற்றி வந்த அமெரிக்க நிலவுக் கண்காணிப்புச் சுற்று துணைக் கோள் [(LRO) -LUNAR RECONNAISSANCE ORBITAL] சந்திரயான் -2 விக்ரம் தளவுளவியைத் தேடிய போது, நிலவில் இருட்டாகி விட்டதால், காண முடியாமல் போனது. அடுத்து சூரிய ஒளி நிலவின் தென் துருவத்தில் விழும்போது, அமெரிக்கத் துணைக்கோள் தேடிக் காண வாய்ப்புகள் உள்ளன.
தொடர்ந்தெழும் இந்திய விண்வெளித் தேடல் முயற்சிகள்
சந்திரயான் -2 விண்வெளித் திட்ட வினைப்பாடுகள் யாவும் சமீபத்தில் இந்தியா சாதித்த உன்னத விஞ்ஞான பணிகளாகக் கருதப் படுகின்றன. அதுபோல் ராக்கெட் நுணுக்கம் விருத்தியாகி, இந்தியா ராணுவப் பாதுகாப்பு முன்னணியில் இருப்பது, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் சவாலாக உள்ளது. இந்தியா நிலவுக்கும், செவ்வாய்க் கோளுக்கும், விண்சிமிழ்களை அனுப்பி, விண்வெளித் தேடல் முயற்சிகளை, 50 ஆண்டுகட்கும் மேலாக நடத்திக் கொண்டு வருவது பெருமைக்கு உரிய வரலாற்றுச் சாதனைகள் ஆகும்.
1969 இல் இந்திய விண்வெளித் தேடல் வாரியம் நிறுவகம் ஆனது. ஆரம்ப காலங்களில் ராக்கெட் ஏவுகணைகள் விருத்தி செய்யப்பட்டு, துணைக் கோள்கள் பூமியைச் சுற்றிவர அனுப்பப் பட்டன. 2008 இல் சந்திரயான் -1 நிலவு நோக்கி ஏவப்பட்டது. அதுவே நிலவில் நீர் இருப்பதை முதல் கண்டுபிடித்தது. 2014 இல் செந்நிறக் கோள் செவ்வாய் நோக்கி, இந்தியா மங்கல்யான் விண்சிமிழ் ஏவி வெற்றிகரமாக, சுற்றி வந்தது. 2019 இல் சந்திரயான் -2 மீண்டும் நிலவு நோக்கிச் சென்று, முதன்முதல் விக்ரம் தளவுளவியை நிலவின் தென் துருவத்தில் இறக்கி விட்டது. இதுவரை எந்த நாடும் துணிந்து புரியாத தீரச் செயலாகக் கருதப்படுகிறது. அடுத்து இந்தியாவின் திட்டம், மூவர் இயக்கும் விண்கப்பல் 2022 ஆண்டில் ஏவப் பட்டு வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றிவரும்.
+++++++++++++++++
விக்ரம் தளவுளவிக்கு 14 நாட்கள் ஓய்வு
+++++++++++++++++++++
- https://www.space.com/topics/
india-space-program - https://www.space.com/india-
moon-lander-time-running-out. html - https://www.space.com/lro-
fails-see-india-moon-lander- vikram.html - https://www.space.com/india-
chandrayaan-2-moon-south-pole- landing-site.html
+++++++++++++++++
விக்ரம் தளவுளவி சாய்ந்து இறங்கியுள்ளது
சூரிய ஒளிமறைவுப் பகுதி நிலவில் சிக்கிய விக்ரம் தளவுளவி.
2019 செப்டம்பர் 17 இல் நாசாவின் நிலவுக் கண்காணிப்புச் சுற்றி [(LRO) LUNAR RECONNAISSANCE ORBITOR] நிலவின் தென் துருவத்தை நெருங்கி சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி விழுந்திருக்கும் இடத்தின் மீது பறக்கும் போது, அந்திமப் பொழுதாகி விட்டதால் தளவுளவி உருவத்தைப் படம் எடுக்க முடியவில்லை. அந்திமப் பொழுதின் மங்கிய வெளிச்சத்தில் தளவுளவி விழுந்த இடத்தைக் நாசாவின் நிலவு கண்காணிப்புச் சுற்றியின் சக்தி வாய்ந்த காமிரா காண முடியாமல் போனது. இப்போது [2019 செப்டம்பர் 19] நிலவின் இராப் பொழுது துவங்கி விட்டதால் இன்னும் 14 நாட்கள் தளவுளவி இருட்டு விண்வெளியில் சூரிய வெளிச்சம் படாது.
ஆயினும் நிலவைச் சுற்றிவரும் சந்திரயான் -2 விண்சிமிழ் கருவிகள் சோதிக்கப் பட்டு, திட்டமிட்ட மற்ற தகவலை இன்னும் சுமார் ஏழாண்டுக்கு அனுப்பிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் தகவல் அனுப்ப இயலாத தளவுளவி 14 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதற்குப் பிறகு விழித்து தகவல் அனுப்பினால் இந்தியாவுக்கு நிலவுப் பயண வெற்றியில் நான்காம் இடம் கிடைத்துப் புகழடையும்.
விக்ரம் தளவுளவி நேராக இறங்கி நிலவின் தென் துருவத்தில் அமர எதிர்பார்க்கப் பட்டது.
+++++++++++++++++++
- https://economictimes.
indiatimes.com/news/science/ nasa-joins-isro-to-track- vikram-calling-home/ articleshow/71097087.cms - https://www.moneycontrol.com/
news/india/chandrayaan-2-nasa- helps-isro-to-establish- communication-with-vikram- lander-4432871.html?fbclid= IwAR3zEJRhzpwcwWipD2mgPMutgpMN pCfHXFSbq2-APrec5utl- ucVeEW5VJY - https://www.businesstoday.in/
latest/trends/chandrayaan-2- not-only-isro-nasa-also-sends- messages-lander-vikram-moon/ story/378594.html?fbclid= IwAR3aeAO2h152zc0uRLO90Ym7FpPy rmXXHIMpqtJ3jXX1qA145d_NBuz_ Pgs - https://www.businesstoday.in/
latest/trends/chandrayaan-2- landing-failed-isro-loses- contact-with-lander-vikram/ story/377813.html?utm_source= recengine&utm_medium=WEB& referral_sourceid=378149& referral_cat=Trends - https://www.indiatoday.in/
science/story/chandrayaan-2- vikram-landing-somersault- isro-exlusive-1598882-2019-09- 13 - https://www.indiatoday.in/
science/story/2-giant- asteroids-as-big-as-burj- khalifa-to-zip-past-earth- today-nasa-1599001-2019-09-14
++++++++++++++++++++++++++++++
சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் தகவல் அனுப்பத் தவறி நிலவில் சாய்ந்து கிடக்கிறது.
இப்போது இந்திய விண்வெளித் தேடல் விஞ்ஞானிகளுக்கும், பொறியியல் நுணுக்க நிபுணருக்கும் மிக மிகச் சவாலான தருணம் நேர்ந்துள்ளது. சந்திரயான் -2 திட்டம் 95% வெற்றிகர மாக நிகழ்ந்து, நிலவின் தென் துருவத்தில், விகரம் தளவுளவி இறங்கி வரலாற்று முதன்மை பெற்றுள்ளது. இறுதி நேரத்தில் தளவூர்தி தகவல் அனுப்பத் தவறி, சில மின்யந்திரக் கோளாறு களால், செங்குத்து நிலை தடுமாறி நிலவில் சாய்ந்து கிடப்பதை, நிலவைச் சுற்றிக் கொண்டிருக்கும் சந்தியான் -2 விண்சிமிழ் கண்டுபிடித்துப் படம் எடுத்துள்ளது. இப்போது விக்ரம் தளவூர்தி நேராக நிமிர்த்தப் படவேண்டும். மீண்டும் தகவல் இணைப்பு நிகழ வேண்டும். இப்பணிகள்தான் இப்போது முயற்சியில் உள்ளன. இந்திய விஞ்ஞானி களுக்கு விக்ரம் தளவுளவியை உயிர்ப்பிக்க அமெரிக்க நாசாவின் வல்லுநர் முன்வந்துள்ளனர். காரணம் நாசாவின் சில கருவிகள் விக்ரம் தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இந்த அவசரப் பணிகள் முடிந்து, சந்திரயான் -2 இன் திட்டம் முழுமையாய் வெற்றி அடைய வாய்ப்புக்கள் உள்ளன.
WHAT NOW?
It’s been nearly a week since the Indian Space Research Organisation lost contact with the Chandrayaan-2 lander. Since then, Isro, which continues to remain tight-lipped over the matter, has been making constant efforts to re-establish communication with the spacecraft.
A day after losing contact with Vikram, Isro said it had been able to locate the Chandrayaan-2 lander on the Moon. However, communication with the lander remains elusive.
Next week, a lunar orbiter operated by the United States’ National Aeronautics and Space Administration (Nasa) is set to fly over the area where Vikram is located. The orbiter is expected to take pictures and offer clues to Vikram’s fate.
Meanwhile, the Chandrayaan-2 orbiter remains safe in its orbit around the Moon. In fact, it was the Chandrayaan-2 orbiter that, on Sunday, managed to locate Vikram on the lunar surface.
The orbiter’s mission life has been extended from one year to seven years, due fuel savings made during the trip to the Moon. Over the course of its mission life, the Chandrayaan-2 orbiter will perform several experiments, including one to estimate the quantity of iced water on the Moon.
சந்திரயான் -2 திட்டம் 95% நிறைவு பெற்று, இறுதியில்
தகவல் அனுப்பத் தவறியது.
[ விண்வெளித் தேடல் வாரியத் தலைவர் டாக்டர் சிவன்.]
++++++++++++++++
- https://youtu.be/q7Omv4EX8RM
- https://economictimes.
indiatimes.com/news/science/ chandrayaan-2-setback-india- loses-contact-with-vikram- lander-during-descent/ articleshow/71018277.cms?utm_ source=newsletter&utm_medium= email&utm_campaign=mlpdaily& ncode= 4b749efe6f3285bfc668b352f29b82 70 - https://youtu.be/phN5S9cHeWM
- https://frontline.thehindu.
com/static/html/fl2619/ stories/20090925261913200.htm - http://www.cnn.com/2009/WORLD/
asiapcf/08/30/india.moon. mission/index.html - https://youtu.be/sd6grEvZn1A
- https://youtu.be/ANyg9VGSqbY
- http://www.moondaily.com/
reports/NASA_finds_Indian_ ?Moon_lander_with_help_of_ amateur_space_enthusiast_999. html - https://news.abplive.com/news/
india/indian-techie-shanmuga- subramanian-helps-nasa-find- chandrayaan-2s-vikram-lander- on-moon-1117529 - https://www.nytimes.com/2019/
12/02/science/india-moon- mission-vikram-lander-found. html - http://www.moondaily.com/
reports/India_targets_new_ moon_mission_in_2020_999.html - http://www.moondaily.com/
reports/India_says_it_will_ try_again_to_land_on_moon_999. html - https://economictimes.
indiatimes.com/news/politics- and-nation/president-ram-nath- kovind-addresses-to-the- nation-on-the-eve-of-the-71st- republic-day/videoshow/ 73616426.cms - https://en.wikipedia.org/wiki/
Indian_Human_Spaceflight_ [January 24, 2020]Programme - https://www.isro.gov.in/
update/01-jan-2020/press-meet- briefing-dr-k-sivan-chairman- isro
+++++++++++++++++++++
S. Jayabarathan [jayabarathan.wordpress.com/] January 26, 2020