சிறுகதைப் பயிற்சிப் பட்டறை

தமிழிலக்கிய மாணவர்களுக்கான சிறுகதைப் பயிற்சிப் பட்டறை, 2/3/2020 திங்கள் அன்று சிக்கண்ணா அரசு கலைக்கலூரி, திருப்பூரில் நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் பாலசுப்ரமணீயன் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் சி.வி. தீபா தொடக்க உரை நிகழ்த்தினார். அவரின் உரையில் :
தமிழ் உலகத்தின் மூத்த மொழிகளில் ஒன்றாகும். படித்து உணர்ந்து கொள்ள தமிழில் பல்வேறு செவ்விலக்கியங்களும் நவீனப் படைப்புகளும் உள்ளன. நம் நாட்டுப் பிதா காந்தி அவர்கள் தன் தாய் மொழியான குஜராத் மொழியில் எழுதுவதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் சுயசரிதையையும் அவரின் தாய்மொழியில்தான் எழுதினார். தாய்மொழியில் கற்பதும் எழுதுவதும் பேரின்பம் தரும். இதயத்தைத் தொடும்.. தமிழில் மாணவர்கள் படைப்பிலக்கியங்களைப் படிப்பதும், படைப்பதும் அவர்களீன் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றார்.
பொருளியல் துறைத்தலைவர் மு.கி. விநாயகமூர்த்தி, வரலாற்றுத்துறைத் தலைவர் சங்கமேஸ்வரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்
எழுத்தாளர்கள் எஸ் ஏ காதர், துசோபிரபாகர், சுப்ரபாரதிமணியன், ஆகியோர் சிறுகதைப் பயிற்சிப் பட்டறையை நடத்தினர். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், வடிவங்கள், நவீன சிறுகதை அம்சங்கள் ஆகியவை குறித்து பயிற்சிகள் அளித்தனர்.
முனைவர் பி. கருணாகரன், தமிழ்த்துறை கவுரவ விரிவுரையாளர் நன்றி கூறினார்.