ஆட்கொல்லி

சி. ஜெயபாரதன், கனடா
ஆட்கொல்லி , ஆட்கொல்லி
நச்சுக் கிருமி இது !
உடனே கொல்லாத
நாட்கொல்லி இது !
யுகப்போராய்
ஞாலத்தில் தீப்போல் பற்றிவரும்
காலக் கிருமி இது !
மனிதரால் உண்டாகி,
மனிதரால் பரவி,
மனிதரைக் கொல்லும் கிருமி இது !
உலகை ஒன்றாக்கி,
ஒருவரை ஒருவர் மதித்து,
உதவி செய்ய இணைத்த கிருமி இது !
ஒளிந்திருந்து சில நாளில்
உயிரைக் குடிப்பது !
கடவுளுக்கு அஞ்சாதவன்
குடலும் நடுங்குது !
குவலயம் ஒடுங்குது !
கத்தியின்றி
ரத்த மின்றி யாவரும் புரியும்
யுத்தமிது !
செத்துப் போவார்
சிலர் !
பித்துப் பிடிப்பார் சிலர் !
நித்தம் தவிப்பார்
சிலர் !
ஜாதிப் போரில்லை இது !
மதப்போ ரில்லை !
இது இனப்போரில்லை !
ஊமைப் போராய்த் துவங்கி
உலகப் போராய்
இமைப் பொழுதில் மூண்டு
விசுவரூபம் எடுத்த
அசுரப் போர் இது !
ஆட்கொல்லி, நாட்கொல்லிக்கு
வேட்டு வைப்பது
எப்படி ?
இயற்கை ஒன்றைத் தவிர உலகில் தோற்றுவிப்பது, வேறு எதுவும் இல்லை. மனிதன் இருப்பதை எடுக்கிறான், அதைக் கெடுக்கிறான், பலியாய் தன்னைக் கொடுக்கிறான்.
மனிதன் நச்சுக் கிருமி கரோனாவை ஆக்கவில்லை. ஆக்க முடியாது. உறங்கிக் கொண்டிருந்த நச்சுக் கிருமியை எழுப்பி விட்டான். பண்டோரா பாம்புப் பெட்டியை திறந்து விட்டான். அதை மூடத் தெரிய வில்லை இப்போது.
இந்த தொற்றுநோய் மரணங்கள், வாழ்க்கைப் பாதிப்புகள், இழப்புகள், முடக்கம், பெருந்துயர் யாவும் மனிதத் தவறால் நேர்ந்தவை.
இப்பேரிடர் கடவுள் செயல் அல்ல.
சி. ஜெயபரதன்