படக்கவிதைப் போட்டி – 254

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
பிரேம்நாத் திருமலைச்சாமி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (19.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
pottikana kavithaikalai epade sent panuvathu contact list
இதே மாதிரி, இதே பக்கத்தின் கருத்துப் பெட்டியிலேயே உங்கள் கவிதையை இட்டால் போதும். போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
thanks
மறு உருவம்
ஓடைகள் ஒன்று சேர
நிலம் அன்றி கோர்க்க பசி அறியா மானுடன் புசித்தது ஏணோ!
மறைந்தது ஏணோ!!!
என்னுள் புதையுண்டது ஏணோ!!!!
அதிகாரத்தை அடுக்கு தலையனையில் அடுக்கியது ஏணோ! ?
கரை சேர கடலிடம் அடி பணிந்தது ஏணோ!!!!
மூச்சடக்கி முத்த பூமியில் யுத்தம் நடத்தியது ஏணோ!!!!!!
கரை அல்லா தெப்பக்குளத்தில் நீந்தியது ஏணோ!!!?
பாசம் அன்றி கிடந்தவனுக்கு ரோஷம் வந்தது ஏணோ!!! ;;
வேஷம் போட்டது ஏணோ!!!!
பெருங்கோஷம் எழுப்பியது ஏணோ!!!!
நீளம் இன்றி அளந்தது ஏணோ!!! ;
நித்தம் மறைய நீதி கேட்டது ஏணோ!!!
தென்றல் விச தெவிட்டாத சுகம் கிடைத்தது ஏணோ!!!?
கூற கூவியல்கள் அதில் கிடைத்தது ஏணோ!!!
பூ
ஒன்று தொடுக்க பெரும்பாதை தேடிநெடுந்தூர நொடிகளை துளைத்தது ஏணோ!!!!
விற்கும் பூவே உனை மீண்டும் மீண்டும் நினைப்பது ஏணோ!!!
ஓட்டின் பிரிவு ஓரமாய் பிளந்தது ஏணோ!!!
துரத்தும் இரவும் முடியா பகலும் நீண்டது ஏணோ???
காக்கை பிடிக்க கடலுக்கு சென்றது ஏணோ?!!!
வேள்விகள் ஆயினும் அதில் கொள்ளை கேள்விகள் எழுப்புவது ஏணோ!!!
அரை மீனை பிடிக்க ஆரவாரம் தேவை தாணோ!!!
அறை மீனை பிடிக்க ஆரவாரம் தேவை ஏணோ!!!
ஆணி வேரை வெட்டி எடுக்க பூகம்பம் வந்த தேவை ஏணோ!!!?
கோட்டையினுள் கூடி புக (இத்தனை) பேர் கூட்டம் தேவை ஏணோ!!!?
தேவை தனில் ஒரு வேர்வை தனில்போரட போர் கூட்டம் அலைவது ஏணோ!!!! வீசும் காற்றை நிறுத்தியது ஏணோ!!!
அதில் கொஞ்சம் பித்தம் கலைவது ஏணோ!!!
போர்வைக்குள் நனைந்துதது ஏணோ!!!
ஆணி வேரை வெட்டி எடுக்க பூகம்பம் உங்களுக்குள் வந்த தேவை ஏணோ!!!!
கோட்டையினுள் கூடி புக இத்தனை பேர் கூட்டம் தேவை ஏணோ!!!
குறட்டையில் மிதக்கும் வெம் பூச்சி நாணோ!!!
மின் விளக்கின் எதிர் பாய்ச்சல் நீணோ!!!!
விரல் தீண்டும் வைகறை நாணோ!!!!
அதில் அடி ஆளும் அனுபவம் நீணோ!!!!! !
அரு மருந்தாய் நிற்கும் நிழற்க்கொடை நீணோ!!!
அதை சுற்றி சுழலும் போர்க்கொடி நாணோ!!!!
காம புசி ஆற்றியதும் ஏணோ!!!! தினமும் சுமப்பது ஏணோ!!!
நித்தமும் நினைக்க தாணோ!!!!
இரு பகல் சேர்ந்து தாக்கியது ஏணோ!!!!
சிறு புல்லோடு நான் வேட்டை ஆட
நீ
வேட்கையோடு வெக்கையில் குளித்தது ஏணோ!!!!
வெட்கி தத்தளித்து ஏணோ!! இவையாவும் ஒற்றைநிலவை பிடிக்க தாணோ!!!!
குட்டி நீர் வீழ்ச்சியை குளிக்க வைக்க தாணோ!!!
சிறு வயதில் வெரும் புன்னகையோடு நான் விளையாட வா இவை அனைத்தும் உங்களுக்குள் ஏணோ!!!!
இவையாவும் இப்போது புரியவில்லை எனக்கு தாணோ!!!!!! எனக்கு ஏணோ!!!!
உயர் நிலை…
அன்னை யென்றே ஆக்கியேதான்
அடுத்த நிலைக்கே உயர்த்திவிட்டாய்,
என்னைப் போலப் படிப்பறிவில்
எளிய நிலையிலே விட்டிடாமல்
உன்னை நானும் படிக்கவைத்தே
உயர்ந்த நிலையில் வைத்திடுவேன்,
தன்னை யறிந்திடத் தங்கமேயுனைத்
தகுந்த முறையில் வளர்ப்பேனே…!
செண்பக ஜெகதீசன்…
படக்கவிதைப்போட்டி – 254
பிள்ளைக்கனி
செல்லம்மா – நீ சாதித்துப் பேர்வாங்கப் பிறந்தவள்; உன்சாதனை
நாலுபேருக்கு வழிகாட்டி ஒளியூட்டுவதாய் இருக்கட்டும்
முத்தம்மா – நீ முன்னேறி மின்னப் பிறந்தவள்; உன்பாதை
தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக்கும் வித்தையைச் சொல்லட்டும்
சின்னம்மா – நீ பதினாறும் பெறப் பிறந்தவள்; உன்இல்லறம்
ஆலாய்த்தழைத்து அறுகாய்வேரோடி நல்லறம் ஆகட்டும்
அன்னம்மா – நீ நிமிர்ந்து நிற்கப் பிறந்தவள்; உன்ஆளுமை
நாண்அச்சமின்றி மானிடம் மணக்க மிளிரட்டும்
தங்கம்மா – நீ என்றுமென் பேர்சொல்லப் பிறந்தவள்; உன்வாழ்வு
மங்காத பொன்னாய்ப் புடம்போட்டு ஒளிரட்டும்
தாயம்மா – நீ தாழ்வகற்றத் தண்ணிழலாய் உதித்தவள்; உன்பிறவி
சேயாகித் தரணியெங்கும் தமிழ்ப்புகழ் கூட்டட்டும்
நல்லம்மா – நீ எதையும் எதிர்கொள்ளப் பிறந்தவள்; உன்மேனி
வெல்லும் அழகொடு திடம்பெற்றுப் பொலியட்டும்
பொன்னம்மா – நீ இலக்குநோக்கிப் பாயப் பிறந்தவள்; உன்மனம்
மன்னும்விளக்காய் ஆயிரமாயிரம் அகலொளி ஊட்டட்டும்
கண்ணம்மா – நீ கற்றுக் கரைசேரப் பிறந்தவள்; உன்கல்வி
மண்ணின் இருள்போக்கும் மாவிளக்காய்த் திகழட்டும்
அமிர்தம்மா – நீ சமைத்துப் பசியாற்றவும் பிறந்தவள்; இப்போது
என்னிடம் வாநாம் ‘பப்பு கடஞ்சி’ விளையாடுவோம்
ச.கண்மணி கணேசன்
படக்கவிதைப் போட்டி 254
பாசப்பந்து நீதானே
பரிமளமாய் இருப்பவளே
முளைப்பற்கள் வருமுன்னே
முகம் சாய்த்து சிரிப்பவளே
தத்தி நடக்கும் கால்களோடு
தாவிப் பிடிக்கும் கைகளும்
தாயும் பாசப்பரிவோடு உனை
தாங்கித் தான் பிடிக்கிறாளோ
தங்கள் வெள்ளி உனக்கெதற்கு
சர்வ பூஷணம் நீதானே
கவலைகள் நூறிருப்பினும் உனை
கொஞ்சி மகிழும் தாயவள்
அவள் கனவு என்னவென்று
கேட்டு நீயும் வளர்ந்திடு
சாதிக்கப் பிறந்தவள் நீ
சரித்திரம் படைத்திடு
உலக மகா சரித்திரம் படைத்திடு
சுதா மாதவன்
உன்னுதட்டில் தெறிப்பதெல்லாம்
என்னுயிரின் சிரிப்பு
உன்னுருவம் தானடி
என் விழியின் சிலிர்ப்பு..
குயிலும் குருவியும்
சிரிக்கிறது மேலே
உந்தன் மொழியோ
புரிந்தது போலே..
ஆழி அருவியின்
ஆலாபம் சங்கீதம்
அத்தனையும் அடங்கியதே
அழகியுன் ரீங்காரம்..
மகளே நீயே
மாயக் கண்ணாடி
எந்தன் மருவுருவை
காட்டிவிட்டாய் முன்னாடி
அம்மாவென நானலற – நீ
ஒருமுறை பிறந்தாயடி
அம்மாவென நீயழைக்க – நான்
ஒவ்வொருமுறையும் பிறக்கிறேனடி..
– புவிதா அய்யாதுரை
அன்பின் அரிச்சுவடி
அன்னைமடி மெத்தையிலே
ஆடுமொரு தத்தை நான்
இத்தரையில் பிறந்தவரில்
ஈடுஇணை அற்றவள் நான்
உத்தமராய் இவருமெனை
ஊட்டி தினம் வளர்த்திடவே
எத்தனையோ பிறவிக்கடன்
ஏட்டினிலும் எழுதவொண்ணா
ஐயிரு திங்கள் வைத்தீன்று
ஒப்புரவுடனே வாழ்வதற்கு
ஓயாமல் காத்து நிற்கும்
ஒளடாதமாம் இவர் அன்பெனும்
ஆயுதமேயென் உயிர் காப்பு.
அம்மா
கவலைகள் மறக்க வைத்தாய், அன்பென்ற அடைமழையில் அனுதினமும் நனைய வைத்தாய்,
காய்ச்சல் வந்து படுத்துவிட்டால் கவலையுடன் மருந்தளித்தாய்..எத்தனை ஜென்மம் எடுப்பேனம்மா
உன் அன்புக்கடனை அடைப்பதற்கு!!