பொது

அழைப்பில் ஓர் அற்புதம் – ”யுவர் சாய்ஸ்” – தொலைக்காட்சி நிகழ்ச்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி “யுவர் சாய்ஸ்”.  நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியான இதில் நேயர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆன்மீகம் சம்பந்தமான அனைத்துத் திருத்தலக் காட்சிகளையும் கண்டு ரசிக்கலாம்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் பல மொழிகள் பேசும் நேயர்களிடமும் சரளமாக அதே மொழியில் பேசி அசத்துவதும் நிகழ்ச்சியின் இடையிடையே பல்வேறு அரிய தகவல்களையும், அற்புதமாக பாசுரங்களையும் பாடி நேயர்களை பரசவப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒரு பகுதியில் இருக்கும் ஒரு நேயர் தாம் நினைத்தவுடனே பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு ஆலயம் குறித்தோ அல்லது அந்த ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள் குறித்தோ அரிய காட்சிகளை இந்நிகழ்ச்சியின் மூலம் கண்டு மகிழ வாய்ப்பை வழங்குகிறது ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி.

ஆலயங்கள், உற்சவங்கள், உபன்யாசங்கள் மட்டுமின்றி சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலிருந்தும் விருப்பமான காட்சிகளை நேயர்கள் தொலைபேசி மூலம் கேட்க உடனடியாக அந்தக் காட்சி ஒளிபரப்பப்படுவது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பு.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க