சூரசம்ஹாரம் காட்டும் தத்துவம்!

0

அன்பு நண்பர்களே,

நறுக்கென்று நாலு வார்த்தைகளில், சுவையாக, எதைப்பற்றி வேண்டுமானாலும் இந்தப் பகுதியில் நீங்களும் எழுதலாமே! நாட்டு நடப்பு, சமுதாயச் சிந்தனை, ஆன்மீகம், மனித நேயம், மழலைக் குறும்பு, மூத்தோர் சொல் இப்படி எது வேண்டுமானாலும் புகுந்து கலக்குங்கள் தோழர்களே!

 

 

நறுக்… துணுக்.. (1)

 

 

 

 

 

 

 

காயத்ரி பாலசுப்ரமணியன்


முருகனை வழிபடும் பக்தர்களால் பெரிதும் கொண்டாடப்படுவது சூரசம்ஹாரம். முருகன் சூரபத்மனை அழித்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த நிகழ்ச்சிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனிதனாய்ப் பிறந்த அனைவரும் தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பாடுபடுகிறார்கள். மத நூல்கள் மட்டும் அல்லாது மகான்களும் காலம் காலமாக இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்தி வந்துள்ளனர்.  இதற்காகப் பல வழிமுறைகளையும், நியமங்களையும் வகுத்துள்ள போதிலும்,  மனிதன் இறைநிலையை அடைவது என்பது சற்று தடைகளோடு  கூடியதாகவே உள்ளது.  மனிதனிடம் இருக்கும் காமக், குரோத குணங்கள்தாம், இறைவனை அடைய விடாமல் தடுக்கின்றன. இவை மனிதனை , அவன் எடுக்கும் முயற்சிகளை அஞ்ஞானம் என்னும் இருள் திரை கொண்டு மூடிவிடுகிறது.  அத்துடன் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனை கீழான நிலைக்கும் இவைகள் தள்ளி விடுகின்றன. இந்த குணங்கள் தாம் நம்மைப் பிடித்து ஆட்டும் சூரன். இதனை அழிப்பது வேல். ஏன் வேலில் என்ன விசேஷம்?  வேலின் முனைப் பகுதி குறுகியும்,  கூர்மையாகவும் ,அதனைத் தொடர்ந்து வரும் பகுதி அகலமாகவும் உள்ளது. இந்தக் கூரான வேல்,,  அஞ்ஞானம் என்னும் திரையை அகல குத்திக் கிழிக்கும் போது, இருள் விலகி, அசுர குணம் ஒழிந்து, மனிதன் மெய்ஞ்ஞானத்தைப் பெறுகிறான். மெய்ஞானம் மூலம் மனிதன் இறைவனை வழிபட்டு தெய்வநிலையை அடைகிறான்.   சூரசம்ஹாரம் கொண்டாடும் இத் தருணத்தில், வேலவன் நம் அசுர குணங்களை அழித்து,  அனைவருக்கும் மெய்ஞ்ஞானம் அருளட்டும்.  வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *