Author Archive

Page 1 of 1612345...10...Last »

ஞானச் சுடர் [3]

ஞானச் சுடர் [3]
-இன்னம்பூரான்  நவம்பர் 01, 2017 அரசல் புரசலாகக் குழப்பம் அதிகரித்து தலைநகர் முழுதும், பின்னர் சிக்கலாகிவிட்ட மகளிர் கூந்தல்போல் மற்ற பிராந்தியங்களிலும் பரவியது; ‘கந்தரகூளம் போல’ என்று ஒரு பிள்ளையார் கோயிலாண்டி அதை வருணித்தார். இது இப்படியிருக்கும்போது, கணீரென்று நாற்கால் மண்டபத்தின் ஆராய்ச்சி மணி ஒலித்தது; ஜயபேரிகை முழங்கியது; ஆங்காங்கே தண்டோரா சத்தம் காதைப் பிளந்தது. இவையெல்லாம் அவைக்கு அரசர் வருகிறார் என்பதற்கு சமிக்ஞைகள். ... Full story

ஞானச் சுடர் [2]

ஞானச் சுடர் [2]
-இன்னம்பூரான் அக்டோபர் 25, 2017 பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா எனப்படும் பாரதவர்ஷம் முழுவதையும் ஒரு மன்னர்பிரான் ஆண்டுவந்தார். வெண்குடை, கிரீடம், சாமரம், சிம்மாசனம், செங்கோல் போன்ற அரசாட்சி சின்னங்களும், பட்டு, ஜரிகை, பீதாம்பரம் போன்ற படாடோப ஆடைகளும், ஜொலிக்கும் வைரம், மரகதம், வைடூர்யம், பவழம், நன்முத்து போன்றவை மாசறு பொன்னில் பதித்த அணிகலன்களையும் அணிந்து அவன் யானை மீது அமர்ந்தோ, குதிரை சவாரி செய்தோ, இரதத்தில் பவனி வந்தோ, அந்தப்புரத்திலிருந்து அரண்மணை தர்பார் ... Full story

ஞானச் சுடர்

ஞானச் சுடர்
-இன்னம்பூரான் தீபாவளி தினம் 2017 அக்டோபர் 18, 2017 அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ் புரிந்த நான்.   (பூதத்தாழ்வார்) ***** ஞானச் சுடர் முன்னுரை மதிநுட்பம் அல்லது ஞானம் பற்றிய இந்த நூல் சராசரி மனிதனால், சராசரி மனிதனுக்கு எழுதப்படுகிறது. சான்றோர்களும், மேதாவிகளும் இதில் புதிதாக ஒன்றும் காணவில்லையே என்று அங்கலாய்க்கலாம். பொறுத்தாள்க. கருத்துரிமை யாவருக்கும் உண்டு என்பதால், மாற்றுக்கருத்து, திசைமாற்றம், குறுக்குசால் போன்றவற்றை தடுத்தாட்கொள்ளப்போவதில்லை. ... Full story

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]

நூறு வருடங்களுக்கு முன்னால் [2]
இன்னம்பூரான் செப்டம்பர் 19, 2017 வரலாறு படைத்தவர்களை பற்றி, நாளாவட்டத்தில் மறந்து விடுவது மனிதனின் இயல்பு. வரலாற்றை மாற்றி எழுதுவதும் அவனின் உத்திகளில் ஒன்று. நூறு வருடங்களுக்கு முன்னால் நேற்றைய தேதியில் (செப்டம்பர் 18, 1917) தேசீய கூட்டங்களுக்கு புகழ் பெற்ற கோகலே மன்றத்தில், சிறையில் இற்செறிக்கப்பட்ட தேசபக்தர்களை போற்றி புகழ்வதற்கு, ஒரு கூட்டம் கூடியது. டாக்டர். சர். எஸ். சுப்ரமணிய ஐயர் அவர்கள் தலைமை வகித்தார். இதை ... Full story

தமிழ் சமுதாயம் 2077 [7]: சூடு, சொரணை காக்கும் கொலைகள்

  -இன்னம்பூரான் செப்டம்பர் 5, 2017   2003ஆம் வருடம் ஒரு தீநிமித்தம். கதிரவன் உதிக்கும் முன், முன்னூறுக்கு மேற்பட்ட சராசரி கிராமத்தினர் இரு சடலங்கள் எரிந்து சாம்பலாவதைக் கண்டுகளிக்கக் கூடியிருந்தனர்,  விருத்தாசலத்துக்கு அருகில் இருக்கும் புதுக்கீரைப்பேட்டை என்ற கிராமத்தின் வெட்டவெளியில். மரணச் சான்று பெற, ஆதார் போன்ற மண்ணாங்கட்டிகள் எல்லாம் கிடையாது. தேவையுமில்லை அப்பனும் ஆத்தாளும் இருந்தால் கூட அவை அனாதைப்பிணங்கள். கூடப்பிறந்த அண்ணனும், அருமைச் சுற்றமும், அக்கம்பக்கத்து பிசாசுகளும், கண்ணகி என்ற பட்டதாரி பெண்ணை நஞ்சு ... Full story

கோப்புக்கூட்டல் (7): தமிழ்

கோப்புக்கூட்டல் (7): தமிழ்
-இன்னம்பூரான் செப்டம்பர் 1, 2917   டேவிட் ஷுல்மன் மொழிகள் ஒன்றுடன் ஒன்று உறவாடுவது அவற்றின் இயல்பு. அந்த இயல்பை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டதால்தான், இன்று ஆங்கிலம் உலகமொழியாக உலவி வருகிறது. ஸம்ஸ்கிருதம் என்ற பெயரின் பொருள், ‘நன்கு உருவாக்கப்பட்டது’. கணினியாளர்களில் பெரும்பாலோர் அது உண்மை என்பார்கள். அது ஒரு புறமிருக்க, எந்த மொழிக்கும் அந்தத் தகுதி இல்லாமல் போகவில்லை என்பதை கிரேக்கம், ரோமானிய மொழி, அரபி, ஹீப்ரு, தமிழ் அறிந்தவர்கள் அறிவார்கள். மேலும் சொல்லப்போனால், தனிமொழியாக ... Full story

கோப்புக்கூட்டல் [6]

கோப்புக்கூட்டல் [6]
இன்னம்பூரான் ஆகஸ்ட் 15, 2017 ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன். இன்றைய கோப்பு: அலங்கார வேளையில் ஒரு அலங்கோலம் ... Full story

கோப்புக்கூட்டல் [5]

கோப்புக்கூட்டல் [5]
-இன்னம்பூரான் ஆகஸ்ட் 7, 2017 ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன். இன்றைய கோப்பு: வல்லமையாளர் வல்லமை என்ற மின்னிதழ் வாரந்தோறும் ஒரு வல்லமையாளரைத் தேர்வு செய்கிறது. தற்காலம் அந்த பணியை மனமுவந்து முன்னின்று நடத்தி வரும் செல்வன், ஆய்ச்சிமார் போல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பது போலும், தங்கத்தைப் புடம் போடும் ஆசாரி போலும், நன்கு ... Full story

பாமரகீர்த்தி -1:2: ஹரிஜனத் தந்தை

பாமரகீர்த்தி -1:2: ஹரிஜனத் தந்தை
 -இன்னம்பூரான் ஜூலை 28 2017 பிரசுரம்: மதுரை மாநில மத்திய நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய MDU93641 நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். ஏழு வருடங்களுக்கு முன் சீதாலக்ஷ்மி எழுதியது நினைவில் வருகிறது: ‘... தினமணி செய்தி இது மதுரை,பிப். 23: அரிசன மக்களுக்கும், தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த  வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு (பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் ... Full story

பாமரகீர்த்தி: 1: 1

பாமரகீர்த்தி: 1: 1
-இன்னம்பூரான் ஜூலை 20 2017 அரிஜன அய்யங்கார் சென்னை கன்னிமரா நூலகத்தில் இன்றும் கிடைக்கக்கூடிய 923.254 SAM நம்பர் உள்ள நூலின் பெயர் பார்ப்பவரின் கவனத்தைக் கவரும். அதை 1953இல் பதிப்பித்த கணேசர் பதிப்பகத்துக்கும். அதன் ஆசிரியர் திரு.கூ. சம்பந்தம் அவர்களுக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். தற்காலம் இன பேதம், ஜாதி பேதம், மத பேதம் ஆகியவற்றை ஒழிக்கவேண்டும் என்று பிரசாரம் செய்யும் அன்பர்களில் பலர், தடம் ... Full story

தமிழ் சமுதாயம் 2077 [7] ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’

தமிழ் சமுதாயம் 2077 [7]  ‘பிரதிநித்துவ குடியரசின் மேலாண்மை என்ற மாயை’
  இன்னம்பூரான் ஜூலை 22, 2017 பிரசுரம்: இந்த தொடரின் இலக்கு தமிழ் சமுதாயம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்ற ஆர்வம். தற்காலம் நமது வாழ்வியல் ... Full story

கறுப்பு

கறுப்பு
இன்னம்பூரான் ஜூலை 14, 2917 கறுப்புப்பணம் கூடு விட்டு கூடு பாய்வது பல்லாண்டு பல்லாண்டுகளாக தணிக்கைத்துறையில் எங்கள் கண்களை உறுத்தும். வருமான வரி, கலால் வரி, சுங்கவரி ஆகியவை நான் 1955ல் தணிக்கைத்துறையில் ... Full story

கோப்புக்கூட்டல் [4]

இன்னம்பூரான்   ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன். இன்றைய கோப்பு:   ஜூலை 12, 2017 நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக, நவீன பெண்ணியம் தடபுடலாக ... Full story

I-T raid unearths huge bribes paid for gutkha sale in Tamil Nadu

I-T raid unearths huge bribes paid for gutkha sale in Tamil Nadu
Innamburan The Income-Tax department is awaiting a response to a letter written to the Tamil Nadu government seeking further investigation into suspected bribes of almost ₹40 crore paid to a Tamil Nadu Minister and top officials of the State. The letter, written on August 11, 2016 by ... Full story

இன்றைய கோப்பு: [3]

இன்றைய கோப்பு: [3]
இன்னம்பூரான் ஜூன் 25, 2017 ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் முதல் பகுதி: “தனிமனிதன் இன்புறவேண்டுமானால் சமுதாயம் நன்றாக அமைந்திருக்கவேண்டும். சமுதாயம் பழங்காலத்துத் தேர் போன்றது. அதை எல்லோரும் இழுக்கவேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் இன்பம் உண்டு. பலர் ஏறி உட்கார்ந்து கொண்டு ... Full story
Page 1 of 1612345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.