Posts Tagged ‘இன்னம்பூரான்’

Page 1 of 1512345...10...Last »

தமிழ் சமுதாயம் 2067 [5]

தமிழ் சமுதாயம் 2067 [5]
இன்னம்பூரான் ஜூன் 20, 2017 புலவர் ராமசுப்ரமண்ய நாவலரின் அணுகுமுறை ஒரு பழங்கால ஐதீக கதை ஒன்றை நினைவூட்டுகிறது. சிவபெருமானின் உடுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், மறுபக்கத்திலிருந்து சம்ஸ்கிருதமும் ஒலித்தனவாம். சிலர் இதை கட்டுக்கதை என்பர். சிலர் இது அருமையான கற்பனை என்பர். நமக்கு வேண்டியதெல்லாம், சிந்தனை தானே. இரு மொழிகளும், சொல்லப்போனால், எல்லா மொழிகளிலும் நற்சிந்தனைகள் காணக்கிடைக்கின்றன. சம்ஸ்கிருதத்தில் நமது கலாச்சாரம் தோய்த்து எடுக்கப்பட்டுள்ளது, தமிழிலும், தெலுங்கிலும் போல. ஸலபசாஸ்திரம், ... Full story

தமிழ் சமுதாயம் 2067 [4]

தமிழ் சமுதாயம் 2067 [4]
இன்னம்பூரான் தமிழ்மொழியை செவ்வனே கற்க விழைந்த கேரளத்து ராமசுப்ரமண்ய நாவலர் அவர்கள் சம்ஸ்கிருதத்தை ஆதாரஸ்ருதியாக எடுத்துக்கொண்டது அவரது நுண்ணிய அணுகுமுறையின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது; அவர் தமிழன் என்பதில் ஐயமில்லை. இலங்கை தமிழ்நாட்டு பிராந்தியத்தில் இல்லை. ஆனால் இலங்கைவாழ் தமிழர்கள், தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள், நம்மை விட தமிழார்வம் கொண்டவர்கள், தமிழ்த்தொண்டு செய்தவர்கள் தமிழர்கள் தான். வித்துவான் கணேச ஐயர் அவர்களின் தொல்காப்பிய உரை போற்றத்தக்கது. ஆறுமுக நாவலர், ... Full story

தமிழ் சமுதாயம் 2067 [2]

இன்னம்பூரான் 22 05 2017 முன்னேற்றம் கடினம்; கரடுமுரடான பாதை, கல்லும், முள்ளும், பரல்களும், விரோதமும், எதிர்வினைகளும் இன்னல்களை விளைவிக்கும். பின்னடைவு எளிது. உதட்டசைவும், போலி நடப்பும், கூடாநட்பும், பித்தலாட்டமும் போதும், குப்புறத்தள்ளி, குழி பறிக்க. இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது தமிழனின் கடமை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் கடிதம் எழுதி ஆங்கில கையொப்பம் இடுபவர், தமிழார? அப்படி பார்க்கப்போனால், தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நான் தமிழனானது 75 வயதில்! அது வரை பவணந்தி முனிவர் எழுதிய நன்னூல் நாலடியாரை ... Full story

தமிழ் சமுதாயம் 2067

தமிழ் சமுதாயம் 2067
இன்னம்பூரான் 14 05 2017 தமிழகம் என்பது தரணி முழுதும் பரவியுள்ள தமிழர் உலகம். தமிழ் நாடு என்பது திருவேங்கட மலையை வட எல்லையாகவும், மூன்று கடல்களை மற்ற மூன்று எல்லைகளாகவும் கொண்ட பிராந்தியம். தமிழ் தமிழர்களின் தாய்மொழி. எனவே, தமிழ் சமுதாயத்தை உலகளாவிய மக்கள் கூட்டமாகவும் , தமிழ் நாட்டில் வாழ்பவர்கள் மட்டுமே என்று இரு கோணங்களில் காணமுடியும். டாக்டர் சுபாஷிணி தமிழர் என்பதில் ஐயமில்லை. அவர் தமிழ் ... Full story

கோப்புக்கூட்டல் [2]

கோப்புக்கூட்டல் [2]
-இன்னம்பூரான் ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன். இன்றைய கோப்பு: பொதுநலம் மக்களாட்சியின் இலக்கு. மக்களாட்சியை நடத்தும் நிர்வாகத்தில் சட்டசபை, நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவை இடம்பெறுகின்றன. திராவிட ஆட்சிகள் தலையெடுக்கும் முன் கலோனிய அரசிலும், காங்கிரஸ் அரசிலும் லஞ்சம் இருக்கத்தான் இருந்தது. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன் மாமூல், கிம்பளம் ஆகியவை கூட சொற்பமாகவே இருந்தன. மக்கள் ... Full story

நித்யாபரணங்காதை

நித்யாபரணங்காதை
-இன்னம்பூரான்   உங்களுக்கெல்லாம் தெரியாமா, தெரியாதா என்று எனக்குத் தெரியாது. கோட்டையூரில், நித்யா, நித்யான்னு ஒரு பொண்ணு இருக்கா. நித்தம் நித்தம் சமத்தா இருப்பதால் தான் அந்த பெயர் வைத்தோம் என்று அப்பங்காரன் சொன்னாங்க. அம்மாக்காரி அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அவ நிமிஷத்துக்கு, நிமிஷம் சமத்து என்றாள்; ஒரு புன்னகை உதிர்த்தாள். எனக்குப் புரிஞ்சு போச்சு, ரெண்டு பேரும் பொய் சொல்றாங்கன்னு. அப்புச்சிக்கும் ஆச்சிக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு; தாத்தாவுக்கு அவளொரு ப்ளாட்டினம் குஞ்சு. பின்ன ... Full story

நாளொரு பக்கம்: 6: 2017

நாளொரு பக்கம்: 6: 2017
-இன்னம்பூரான்     नभसो भूषणं चन्द्र: नारीणां भूषणं पति: | पृथिव्या भूषणं राजा विद्या सर्वस्य भूषणं ||   நப⁴ஸோ பூ⁴ஷணம்ʼ சந்த்³ர: நாரீணாம்ʼ பூ⁴ஷணம்ʼ பதி: | ப்ருʼதி²வ்யா பூ⁴ஷணம்ʼ ராஜா வித்³யா ஸர்வஸ்ய பூ⁴ஷணம்ʼ || சொல்லுக்கு அலங்காரம்/அணி சேர்ப்பதைப் பற்றி தமிழிலும், சம்ஸ்க்ருதத்திலும்  தண்டியலங்காரம் என்ற இலக்கணநூல் உளது. உவமைதான் எல்லா அலங்காரங்களுக்கும் மூலாதாரம் என்க.  மேற்படி கவிதையில் நிலாவொளி விண்ணுக்கு அழகு அளிக்கிறது என்றும், கணவன் பெண்களுக்கு அழகு தருபவன் என்றும், நாட்டுக்கு அரசன்தான் பூஷணம் (அலங்காரம்) என்றும், ... Full story

நாளொரு பக்கம்: 5: 2017

நாளொரு பக்கம்: 5: 2017
-இன்னம்பூரான் மார்ச் 30, 2017 "I speak to everyone in the same way, whether he is the garbage man or the president of the university."  -Albert Einstein, physicist, Nobel laureate (1879-1955) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் ஒரு ஆத்மஞானி. சமத்துவத்தை எளிய சொற்களில், அதுவும் தனது பண்பே அதுதான் என்பதையும் இரு வரிகளில் கூறிவிட்டார். அவரது பெளதிக அறிவாற்றல், ஆய்வுத் ... Full story

நாளொரு பக்கம்: 4: 2017

நாளொரு பக்கம்: 4: 2017
-இன்னம்பூரான் மார்ச் 29, 2017 நான்மணிக்கடிகை: 66 திரியழல் காணில் தொழுப விறகின் எரியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமைபா ராட்டும் உலகு. ஆண்டவன் சன்னதியில் சுடர் விட்டு எரியும் திரியுடன் பிரகாசிக்கும் விளக்கைக் கண்டவுடன் கை கூப்பித் தொழுவார்கள். திருமடைப்பள்ளியில் அடுப்பில் சமைக்க உதவும் விறகு கொழுந்து விட்டு எரிந்தாலும் அதை மதியார், மக்கள். அதே மாதிரி, ஒரே வீட்டில் மூத்தது மோழையாகவோ, கோழையாகவோ, அறிவிலியாகவோ இருந்து விட்டால், அதே வீட்டில் ... Full story

நாளொரு பக்கம்: 3: 2017

நாளொரு பக்கம்: 3: 2017
-இன்னம்பூரான் மார்ச் 28, 2017 பெரிய எழுத்து விக்ரமாதித்யன் கதை, கதைசொல்லி இலக்கியங்களில் முதன்மை வகிக்கிறது என்று அந்த காலத்துப் பெரிசுகள் சொல்லிக்கொள்வார்கள் அந்த விக்ரமாதித்யனின் அண்ணனாகக் கருதப்படும் ராஜரிஷி பர்த்ருஹரி உஜ்ஜெய்ன் சமஸ்தானத்தின் அரசர், அறிவாளிகளின் தலைவர், துறவு பூண்ட மாமனிதர். அவருடைய நீதிசதகம், வைராக்யசதகம், சிருங்கார சதகம் ஆகியவை புகழ் வாய்ந்தவை. ஒரு மாதிரி, இங்கே. स्वल्पस्नायुवसावशेषमलिनं निर्मांसमप्यस्थिकम् श्वा लब्ध्वा पारितोषमेति न तु तत्तस्य क्षुधः शान्तये । सिंहो जम्बुकमङ्कमागतमपि त्यक्त्वा निहन्ति ... Full story

நாளொரு பக்கம்: 2: 2017

நாளொரு பக்கம்: 2: 2017
-இன்னம்பூரான்   மார்ச் 27, 2017 பிரசுரம்: History is a novel whose author is the people. - Alfred de Vigny, poet, playwright, and novelist (27 Mar 1797-1863) கவிஞர் Alfred de Vigny அவர்களின் 220வது ஜன்மதினம் இன்று. அவரை முன்வைத்து எழுத நேர்ந்திருப்பதை கண்டு மகிழ்கிறேன். ராஜாராணி கதைகளில் கைசரக்கு அதிகம் இருக்கும்; ஏனெனில் புகழ்ச்சி, தற்புகழ்ச்சி, முகஸ்துதி, மர்மங்கள் ஒளிந்து விளையாடுவது எல்லாம் சிம்மாசனத்தில் ... Full story

நாளொரு பக்கம்: 1: 2017

நாளொரு பக்கம்: 1: 2017
இன்னம்பூரான் மார்ச் 26, 2017 உலகநாதர் இயற்றிய நான்மணிக்கடிகை ஓதாம லொருநாளும் இருக்க *வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம் போகாத இடந்தனிலே போக வேண்டாம் போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய ... Full story

கோப்புக்கூட்டல்: இன்றைய கோப்பு: [5]

கோப்புக்கூட்டல்: இன்றைய கோப்பு: [5]
-இன்னம்பூரான் ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன்பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.   இன்றைய கோப்பு: மார்ச் 25, 2017 இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. பொதுமக்களில் பெரும்பாலோர் வாக்காளர்கள். அவர்களின் பொன்னான வாக்கைப் பெற்றோ/கைப்பற்றியோ/அபகரித்தோ/ விலைக்கு வாங்கியோ/மற்றும் பல உத்திகளில் ஒன்றின் மூலமாகவோ அடைந்து, மாநிலச் சட்டசபைகளிலோ அல்லது நாடாளும் மன்றதிலோ மக்களின் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள், அரசாளும் அமைச்சரவையை அமைக்கிறார்கள், ... Full story

படவாகினி

படவாகினி
-இன்னம்பூரான் 15 03 2017   உங்களுக்கு ‘சிவமயம்’ வில்வநாதக் குருக்களை தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் காலத்தில், துக்ளக்கின் ‘எங்கே பிராமணன்?’ என்ற சர்ச்சைக்குரிய நூல் வெளியாகி விடவில்லை என்றாலும், குருக்கள் மாமாவை பார்த்தால் போதும்; எல்லாம் விளங்கிவிடும். பஞ்சகச்சம் பரமானந்தம் என்று, பட்டை வீபூதியை பரம ஒளஷதமாக அணிந்து, தங்கப்பூண் போட்ட ருத்ராக்ஷமாலை மார்பில் துலங்க, திண்ணையில் உட்கார்ந்து விட்டாரென்றால், ஊர் முழுதும் ‘டுங்க்ருங்சரணே’ பீதி பரவும். அவரோ சுகஜீவி. பத்தமடை, சேர்மாதேவி, வீரவநல்லூர் மாதிரியான ... Full story

இசையும், நடனமும், கருத்தரங்கமும்

இசையும், நடனமும், கருத்தரங்கமும்
இன்னம்பூரான் 12 02 2017 உய்ய வந்தவர் செழுந் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார். – பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 179.4 இன்று வைகறையில், எழுந்தவுடன் நரிமுகத்தில் விழித்தேன் போல. தருமமிகு சென்னையின் இன்றையபோக்கு பற்றி சொல்லும்படியாக ஒன்றும் இல்லையென்றாலும், அசாத்திய துணிவுடன் பயணித்து, பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் ... Full story
Page 1 of 1512345...10...Last »
Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.