நாக பூஷணம்

முனைவர் நாக பூஷணம் , M.A., M.L., Ph.D. வழக்கறிஞர், ஓய்வு பெற்ற சட்டக் கல்வி பேராசிரியர், T.N. Dr. அம்பேத்கார் சட்டப் பல்கலைக் கழக முதல் துணை வேந்தர், எழுத்தாளர், ஆய்வாளர், வானொலி தொலைக்காட்சி பங்கேற்பாளர், மொழி பெயர்ப்பாளர் என பன் முகங்கள் கொண்ட பேரறிஞர். இவருடைய எழுத்துப் பணி : சட்டத் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் . முனைவர் ஆய்வுக் கட்டுரை “ Social Justice and Weaker Sections-Roll of Judiciary” என்ற நூல் வடிவம் பெற்றது. law policy and perspective. Shastri Indo – Canadian awardee – ’94 – ’95 . வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு. மகளிர் , சிறார் உரிமை பாதுகாப்புச் சட்டங்கள், மனித உரிமை , அறிவு சார் சொத்துரிமை Intellectual property right , consumer law – நுகர்வோர் சட்டம் ஆகியவற்றில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். இலக்கிய மற்றும் சட்ட நூல்கள் மொழி பெயர்த்தலிலும் ஈடுபட்டுள்ளார். நம் வல்லமை இணைய இதழுக்கு சட்ட ஆலோசகராகவும், வாசகர்களின் சட்டக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்கும் மனமுவந்து இணங்கியுள்ளார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வாசகர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, சட்டம் சமபந்தமான தங்கள் வினாக்களை [email protected] என்ற முகவரிக்கு அனுப்பலாம்.