DDoS தாக்குதலால் முடங்கிய தளம்

0
cropped-Vallamai_logo_slogan

எல். கார்த்திக்
தள மேலாளர், வல்லமை

ஜனவரி 15 ஆம் தேதி பிற்பகலில் இருந்து ஜனவரி 17 மாலை வரை நம் “வல்லமை” இணையதளம் செயல்படாமல் இருந்தது. ஜனவரி 17 மாலையில் இருந்து மீண்டும் வேலை செய்யத் தொடங்கியது. தளம் முடங்கியதற்கு முதலில் எனது வருத்தங்கள்.

பொதுவாய், தளம் முடங்கவேண்டும் என்றால் அதன் வழங்குபொறியில் (server) பிரச்சனை வரலாம். இதில் வழங்குபொறி பிரச்சனை இல்லை. எந்தவித மால்வேர் பிரச்சனையும் இல்லை. DDoS Attack என்ற, தனிப்பட்ட தளத்தைக் குறிவைத்துச் செய்யப்படும் தாக்குதல்தான் இது. அதனுடன் வேறு இரண்டு சிறிய பிரச்சனைகளும் இணைந்துகொண்டன.

இது வைரஸ் அல்ல. நமது தளத்திற்கு மிக மிக அதிகப்படியான விசிட்டுகளைச் செயற்கையாக உருவாக்கி அதன் மூலம் சர்வரை வேலை செய்யவிடாமல் செய்வதுதான் DDoS. 14&15 இரண்டு நாட்களுமே மிக மிக அதிகமான விசிட்டுகள் இருந்தன. இதனால் நமக்கு சர்வர் சேவையை வழங்கும் நிறுவனமே தளத்தை முடக்கினார்கள்.

அவர்களுடன் கலந்தாலோசித்து “cloud Fare ” எனப்படும் சேவையில் நமது தளத்தை இணைத்துள்ளோம். இதன் மூலம் மிக அதிக விசிட்டுகள் முடக்கப்படும். சர்வர் பாதிக்காமல் இயங்கும். இப்பொழுதைக்கு அபாயம் நீங்கினாலும் , மீண்டும் அப்பிரச்சனை உடனே வரக்கூடாது என்பதற்காக இப்பொழுது தளத்தை யார் விசிட் செய்தாலும் முதலில் “captcha ” கேட்கும். அதைச் சரியாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே தளம் வரும். இது ஒரு தற்காலிக ஏற்பாடே. விரைவில் இதை நீக்கிவிடுவோம். இந்த captcha இருப்பதனால் செயற்கையான விசிட்டுகள் தடுக்கப்படும்.

அனைவரின் ஒத்துழைப்புக்கும் நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.