அண்ணாகண்ணன் யூடியூப் – ஆயிரம் காணொலிகள்

அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் ஆயிரம் காணொலிகளை ஏற்றியுள்ளேன். இவற்றுள் பெரும்பாலானவை, கடந்த ஒரே ஆண்டில் உருப்பெற்றவை. பொது முடக்கக் காலத்திலும் செயல்வேகத்துடன் கிளர்ந்து எழுந்தவை. எந்தத் திசையிலும் கிளைவிரிக்கும் சுதந்திரத்துடன் விரிந்தவை. பல்வேறு பிரிவுகளில், தலைப்புகளில், சுவைகளில் அமைந்தவை. அன்பர்கள் இவற்றைப் பார்த்து, உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

உங்களுக்குப் பிடித்திருந்தால், நேயர் குழுவில் இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

https://www.youtube.com/user/annakannan

About அண்ணாகண்ணன்

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க