எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பெற்ற ஜெயந்தி சங்கர், ஓவியத் துறையிலும் முத்திரை பதித்து வருகிறார். அபாரமான படைப்பூக்கத்துடன், சார்க்கோல், பென்சில், பேஸ்டல், அக்ரிலிக், நீர்வண்ணம் (வாட்டர் கலர்) எனப் பல விதங்களில் வரைந்து வருகிறார். செப்டம்பர் 2018இல் இவரது தனிநபர் ஓவியர் கண்காட்சியாக ஒரு முழுநாள், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் பேராதரவோடு, தேசிய நூலகத்தில் நடந்தது. எல்லா இனத்தவருமாக, எல்லா வயதினருமாக சுமார் 500 பேர் வருகை புரிந்து ஓவியங்களைக் கண்டு களித்தனர். இந்தக் கண்காட்சி, பெரும் வெற்றியாக அமைந்தது.

ஜனவரி 2017 முதல் ஆகஸ்ட் 2018 வரையிலான 20 மாதக் காலக்கட்டத்தில் ஜெயந்தி சங்கர். 600க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டினார். அவற்றுள் 300க்கும் மேலான ஓவியங்களை இந்தப் பதிவில் நீங்கள் காணலாம். இந்தப் பதிவின் பின்னணியில் ஜெயந்தி சங்கரின் வீணையிசையும் இழைகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜெயந்தி சங்கரின் ஓவியங்களும் இசையுமாக இந்த இரட்டை விருந்தை உங்கள்முன் படைப்பதில் மகிழ்கிறோம்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க