ஜாதி, மதங்களைப் பாரோம்

5

விமலா ரமணி

Vimala_Ramaniநாகராஜன் பார்த்துக்கொண்டிருந்தான்,

லில்லி பேசாமல் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கவே இவனே மெல்லப் பேசினான்.

”இது தான் உன் முடிவா?”

”வேற வழி தெரியல்லை நாகு. என்னை… என்னை மறந்திடுங்க”

எல்லாம் இவன் தப்பு. முதலில் தன் தாயிடம் இவன் லில்லியைக் காதலிப்பதற்கு முன் அனுமதி கேட்டிருக்க வேண்டும். இவன் காதலில் லில்லியைத் தான் பார்த்தான். அவள் அழகைப் பார்த்தான். அவள் மதத்தைப் பார்க்கவில்லை.

இப்போது இவர்களின் காதல் வலுவடைந்த பிறகு, இவன் தாய் நிபந்தனை போடுகிறாள். அதுவும் எப்படி?

”ஒரு கிருஸ்துவப் பெண் இந்த வீட்டு மருமகளா வரக் கூடாது…. அவங்க மதம், பழக்க வழக்கம் எல்லாமே வேற. நமக்கு சரிப்படாது. இதை விட நீ ஒரு இந்து விதவையை மணந்தா கூட நாங்க மறுப்புச் சொல்ல மாட்டோம்…”

தாய் சொன்னதை லில்லியிடம் சொன்னபோது தான் அவள் சொன்னாள்….

“என்னை மறந்திடுங்க, உங்க பேரண்ட்ஸ் சொன்ன மாதிரி…“

லில்லி அழுதாள்…. அப்போது தான் இவன் கேட்டான்… இது தான் உன் முடிவா?

அவன் மனம் கனத்தது. அதன்பின்…? இவன் காதலிலே தோற்ற ஒரு காதலனாக வீடு திரும்பினான். இனி அவன் வாழ்வில் காதலுக்கு இடமில்லை. நாட்கள் நகர்ந்தன. இனி…?

இவன் யோசனையில் ஆழ்ந்தான். தூக்கமற்ற இரவுகளைக் கழித்தபின் ஒரு முடிவுக்கு வந்தான். தன் கூட அலுவலகத்தில் பணிபுரியும் பானு என்கிற விதவைப் பெண்ணை மணந்துகொள்ளத் தீர்மானித்தான். பெற்றோர்கள் மீது கொண்ட கோபமும் அதற்கு ஒரு காரணம். பானுவின் அடக்கமும் மற்றொரு காரணம்.

அன்று….?
லில்லி வீடு தேடிப் போனான். இவனைக் கண்டதும் அவள் மகிழ்ந்தாள்.

“வாங்க” என்று உபசரித்தாள்.

”நான் கொடுக்க வந்திருக்கேன்“ என்றவன் தன் திருமண அழைப்பிதழைத் தந்தான்.

“எனக்குக் கல்யாணம். ஒரு விதவையைத் திருமணம் செய்துக்கப் போறேன். ஆனா ஒரு இந்து விதவை. பேர் பானு. முடிஞசா கல்யாணத்துக்கு வா“

விடை பெற்றான். அதன்பின்…?

திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பணி முடிந்து, இவன்  தன் வீட்டில் அடி எடுத்து வைத்தபோது, மனத்துள் ஒரு மகிழ்ச்சி. பானுவை ‘ரிசைன்‘ பண்ணச் சொல்லி விட்டதால் பானு வீட்டில்தான் இருப்பாள் என்கிற மகிழ்ச்சி. இன்று தான் ஒரு விசேஷமான நாள். பானு இத்தனை நேரம் இவன் வீடு வந்திருப்பாள். இவன் வீட்டில் நுழைந்த போது….?

வீடு நிசப்தமாக இருந்தது. இவன் புது மனைவி பானு பூவோடும் புதுப் புடவையோடும் இவனை வரவேற்றாள். ஓ, இன்று இவன் நினைத்தது போல்… கற்பனைகள் பலிக்கும் நாள்.

“அம்மா, அப்பா,,,?“ இவன் கேட்டான்.

“அவங்க கோவிலுக்குப் போயிருக்காங்க” என்றாள் பானு.

விவரம் தெரிந்தவர்க்ள்… புது மணத் தம்பதிகள் தனியாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்.

“என்ன வீடு பிடிச்சிருக்கா? புது வாழ்க்கை எப்படி இருக்கு?”

”உம் எல்லாம் பிடிச்சிருக்கு” பானு வெட்கத்துடன் சொன்னாள்.

”இனி உன் கடந்த காலத்தை மறந்திடு… நான் ஏற்கனவே என்னைப் பத்தி உங்கிட்டே சொல்லி இருக்கேன்…”

ஏதோ ஒரு கோபத்தில் ஒரு விதவையை இவன் மணந்தாலும் ஒரு பெண்ணுக்கு வாழ்வு தந்ததற்காகத் தனக்குள் மகிழ்ந்தான்.

பானு தயங்கினாள். அவன் சொன்னான்.

”எதுவா இருந்தாலும் சொல்லு நமக்குள்ளே வித்தியாசம் இல்லை… சொல்லு.”

”அந்தத் தைரியத்திலே தான் ஒரு உண்மையைச் சொல்லல்லை…வந்து… என் முதல் கணவர் மூலம் எனக்கொரு குழந்தை இருக்கு. அவ ஹாஸ்டல்லே இருக்கா. இப்போ வருவா…”

ஒரு கணம் திகைத்தவன், தன்னைச் சமாளித்தபடி….

”ஓகே அதனால என்ன? இனி உன் சொந்தங்கள் எல்லாம் என் சொந்தங்கள்…” என்றான்.

பானு நெகிழ்வுடன் அவன் கைகளில் முத்தமிட்டாள்… ”எங்கே என் மகளை ஏத்துக்க மாட்டீங்களோன்னு பயந்திட்டிருந்தேன். ஏன்னா என் முதல் கணவர் அமல் ராஜ் ஒரு கிருஸ்துவர். நான் இந்து என்பதைப் பற்றி அவருக்கு எந்தவித மறுப்பும் இல்லை. ஆனா தன் மகளை மட்டும் ஒரு கிருஸ்துவப் பெண்ணா வளக்கணும்ணு என் கிட்டே சாகறபோது சத்தியம் வாங்கிட்டார். அவ பேரு டெய்ஸி. இப்பத்தான் அத்தை கிட்டே விவரம் சொன்னேன். ஏன்னா ஒரு விதவையைத் தன் மருமகளா ஏத்துக்க சம்மதிச்ச உங்க அம்மாவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டாமா? அதனாலே  அவங்க கிட்டேயும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?”

பானு நிறுத்தினாள்.

வாசலில் ஒரு டாக்ஸி வர, கான்வென்ட் சிஸ்டர் கூட வர…. ”மம்மி ” என்று கத்திக்கொண்டே வந்த அந்த ஐந்து வயதுச் சிறுமியின் கழுத்தில் சிலுவை தொங்கியது.

இவன் பிரமித்துப் போய் நின்றுவிட்டான்.

****************************************

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “ஜாதி, மதங்களைப் பாரோம்

  1. A very good story with a strong message….and any story with a social message captures our attention more…and the writer who is known for her flair in writing, has taken advantage of this & has really come out with a simple but an exceptional one…..:):):)

  2. A very good story with a strong message….and any story with a social message captures our attention more…and the writer who is known for her flair fr writing, has taken advantage of this & has really come out with a simple but an exceptional one…..:):):)

  3. vanakkam amma…. ithu mathri innum aayiram kathaikal padithalum nam makkal thirunthuvarakala enbathu theriavillai anal ungal kathai migavum arumai….. ungal thiramai melum melum perugi makkalai sezhumai padutha na virumbugiren…

    nandri…….

  4. Good story even it is short the mez is a big one.

    we should accept all kinds of people with love and affection

    Roops

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.