பொது

சிறுவர்களுக்கு கவ்பாய் தொப்பி அன்பளிப்பு

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில்  – சிம்புதேவன் இயக்கத்தில் – ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்துள்ள ‘இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது நூற்று இருபத்து நான்கு திரையரங்குகளில்..இருபத்தைந்து நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஏஜிஎஸ் நிறுவனம், 26.05.2010 அன்று அனைத்துத் திரையரங்குகளிலும் குழந்தைகளுக்கு மட்டும் கவ்பாய் தொப்பியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. குழந்தைகள் மிகுந்த சந்தோஷத்துடன் தொப்பிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதன் ஒரு  பகுதியாக, 2010 மே 26 அன்று கமலா திரையரங்கில் மதிய காட்சியின் இடைவேளையில் ராகவா லாரன்ஸ், இயக்குநர் சிம்பு தேவன், நடிகர்கள் எம். எஸ்.பாஸ்கர், சாம்ஸ், தியேட்டர் உரிமையாளர் கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு தொப்பிகள் வழங்கி உற்சாகப்படுத்தினர்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க