சரோஜினி நாயுடு பரிசு – 2010

1

2010ஆம் ஆண்டுக்கான சரோஜினி நாயுடு பரிசுக்காக, ‘பெண்களும் பஞ்சாயத்து ராஜூம்’ என்ற கருப்பொருளில் அச்சிதழ்களில் வெளியான கட்டுரைகளை, ‘தி ஹங்கர் புராஜக்ட்’ வரவேற்கிறது. இந்தக் கட்டுரைகள், 2009 ஜூலை 31 முதல்,  2010 ஜூலை 15 வரையான காலத்தில் பிரசுரமாகியிருக்க வேண்டும். இது தொடர்பாக, இந்த அமைப்பின் தமிழ்நாடு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
நம் நாட்டின் அடித்தளத்தில் ஒசையில்லாமல் ஒரு புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 73ஆம் திருத்தத்தின் காரணமாக உருவான ஊராட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கும் விகிதாசார அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அடித்தட்டு ஜனநாயகத்தின் மிகச் சிறந்த அம்சம் எனக் கருதப்படும் இது, உள்ளாட்சிகளில் மகளிர் பங்கேற்கவும், முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பெறவும், தங்கள் கிராமத்திற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்களைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறவும் வழி வகுத்துள்ளது.

இதன் காரணமாக, கிராமப்புறப் பெண்கள் தங்கள் கிராமம் குறித்து முடிவெடுப்பதில், தங்களுக்குள்ள பங்கினை மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக உறுதி செய்து வருகிறார்கள். கிராமங்களிலிருந்து நமக்குக் கிடைத்து வரும் தகவல்கள், ‘பொம்மைகள்’ என்று அவர்கள் மீது வீசப்பட்ட ஏளனங்களைப் பொய்யாக்கி வருகின்றன. பத்திரிகை செய்திகளும், தனிப்பட்ட ஆய்வுகளும், பெரும்பாலான தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள், ஆட்சித் திறனின் நுட்பங்களை அறிந்துகொள்வதில் முனைப்பாக ஈடுபட்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகின்றன. இதுநாள் வரை அதிகம் கவனம் செலுத்தப்படாத விஷயங்களான தண்ணீர்ப் பிரச்சினை, மதுப்பழக்கம், ஆரம்பக் கல்வி, பொதுச் சுகாதாரம், பெண்கள் மீது ஏவப்படும் வன்முறை, பால் அடிப்படையில் இழைக்கப்படும் அநீதிகள் ஆகிய விஷயங்களில் அரசைச் செயல்படத் தூண்டுவதன் மூலம், உள்ளாட்சி என்பதில் பெண்கள் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த அமைதிப் புரட்சி குறித்துக் குரல் எழுப்ப வேண்டியது இன்று அவசியமாகிறது. அடித்தட்டுப் பெண்களின் இந்த வெற்றிக் கதைகளை நகர்ப்புறத்தில் வசிக்கும் கொள்கை வகுப்பவர்கள், அறிவு ஜீவிகள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகள், மேல்தட்டு வர்க்கம், பொதுமக்கள் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவையிருக்கிறது. நம் ஜனநாயகத்தின் இந்தப் புதிய பெண் தலைவர்கள் தங்கள் கிராமங்களுக்கு ஆற்றியுள்ள பங்களிப்புக் குறித்து நம் ஊடகங்கள் பாரபட்சமற்று மதிப்பீடு செய்து வெளியிட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பெண் உள்ளாட்சித் தலைவர்களின் சாதனைச் சரித்திரத்தை வெளியிடும் ஊடகங்களுக்கு ஊக்கமும் ஆதரவும் அளிக்க தி ஹங்கர் புராஜக்ட் உறுதி கொண்டுள்ளது.

இந்த விருது வழங்கும் திட்டம் தொடங்கப்பெற்று, 10 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இந்த ஆண்டு, சரோஜினி நாயுடு பரிசானது ‘பெண்களும் பஞ்சாயத்து ராஜூம்’ என்ற கருத்தில் அமைந்த கட்டுரைகளுக்கு வழங்கப்பட உள்ளன

இறுதித் தேதி:

இந்தக் கருவில் அமைந்த கட்டுரைகள், தி ஹங்கர் புராஜக்ட் தில்லி அலுவலகத்திற்கோ அல்லது சென்னை அலுவலகத்திற்கோ 2010, ஜூலை 15க்குள் வந்து சேர வேண்டும். இந்தத் தேதிக்குப் பின் வருபவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா. கட்டுரைகள், 2009 ஜூலை 31 முதல்,  2010 ஜூலை 15 வரையான காலத்தில் பிரசுரமாகியிருக்க வேண்டும்.

தகுதிகள்:

• அச்சு ஊடகங்களுக்குப் பங்களிக்கும் எல்லாச் செய்தியாளர்களும் (சுயேச்சைப் பத்திரிகையாளர்கள் உள்பட) பங்கேற்கலாம். தி ஹங்கர் புராஜக்ட் ஊழியர்கள், அதனிடம் உதவி பெறும் தோழமை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க இயலாது.

• கட்டுரைகள், அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஊடங்களில் வெளியான பிரதியுடன், ஊடகத்தின் பெயர், வெளியான நாள், எழுதியவர் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.

• கட்டுரைகளுக்கு சொல் வரம்பு இல்லை.

• மேல் குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்டிருப்பின் ஒருவரே எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

நடுவர் குழு:

முனைவர். ஜார்ஜ் மாத்யு, இயக்குநர், சமூக அறிவியல் நிறுவனம்

முனைவர் மீனாட்சிசுந்தரம், மேலாண்மை துணை தலைவர், மைராடா

திருமிகு ஊர்வசி புடாலியா, உதவி அமைப்பாளர், பெண்களுக்கான அரும்புகள் & இயக்குநா, சுபான்

திருமிகு பமீலா பிலிபோசு, இயக்குனர், பெண்களுக்கான சிறப்புச் சேவை

திருமிகு மணிமாலா, இயக்குனர், மாற்றத்திற்கான ஊடகம்

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

தமிழ்நாடு அலுவலகம்,
தி ஹங்கர் புராஜக்ட்,
1,  இராண்டாவது தெரு,
நேரு நகா, அடையாறு,
சென்னை – 600 020.

தொலைபேசி : 044 – 42695225, 044 – 24452520, 098405-88034

மின்னஞ்சல்: kkannan@thp.org

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சரோஜினி நாயுடு பரிசு – 2010

  1. TO the editor,
    Tharppothu thamizhakaththil makalir suya uthavikuzhukkalin seyal paadukal patriya thangalin karuththu therivikkum padi kaettukkolkiraen.viji

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *