கோவையிலிருந்து வெள்ளியங்கிரி
கோவையிலிருந்து வெள்ளியங்கிரி அடிவாரம் வரைக்கும் அண்மையில் நாங்கள் சென்று வந்தோம். வழியெங்கும் அருமையான இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம். தென்னந்தோப்புகள், வாழைத் தோப்புகள், பாக்குத் தோப்புகள், நெல் வயல்கள், திராட்சைத் தோட்டங்கள், மஞ்சள், சோளம், காலிபிளவர்…. என விதவிதமான பயிர்கள் விளைந்து நிற்கக் கண்டோம். கூடவே புதுப் பொலிவுடன் காட்சி தரும் கோவில்கள், கல்லூரிகள், சாலைகள், பழைமை மாறாத வீடுகள், கடைகள் எனப் பலவும் கண்ணுக்கு விருந்து. கொங்கு மண்ணின் வளத்தையும் சிறப்பையும் ஒருசேரக் கண்டோம். எங்கள் பயணக் காட்சிகளின் தொகுப்பு இங்கே.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)