போர்! போர்!! போர்!!!

சி. ஜெயபாரதன், கனடா
போர் வந்திருச்சி! போர் வந்திருச்சி!
அக்கப் போர் வந்திருச்சி!
மக்களுக்கு
துக்கப் போர் வந்திருச்சி!
உக்ரேனுக்கும் ரஷ்ய புட்டினுக்கும்
சிக்கல் போர் வந்திருச்சி!
வீடிழந்து, நாடிழந்து, எல்லாம் இழந்து
கால் நடையில்,
கட்டிய துணியுடன்,
பெண்டு, பிள்ளையுடன்,
ஆயிரக் கணக்கான
மாந்தர்
அந்தோ புலப் பெயர்ச்சி!
அண்டை நாடுகளின் நலிந்த
எக்கானமி நாசமாச்சி!
காரணம் யார்?
பேராசை பிடித்த பேயாட்சி
வல்லரசும்,
வலிமை யற்று
ஆயுதம் கடன் வாங்கும்
மெல்லரசும்.
ஓராண் டுக்கும் மேலாய்
கொரோனா தொத்து நோயில்
திக்கு முக்காடிச் செத்தவர்
கோடி, கோடி!
சூறாவளி யிலும், பேய் மழையிலும்
காட்டுத் தீ எரிப்பிலும்
எல்லாம் இழந்து தவிக்கும்
இல்லற மக்கள்
பல்லாயிரம்! பல்லாயிரம்!
ஓர் நாட்டில்
போர் நிகழ்ந்தால்
உலக நாடுகளில் எல்லாம்
எதிரொலிக்கும்!
உணவுப் பண்டங்கள்
விலை ஏறுது!
பெட்ரோல் விலை ஏறுது!
வீட்டு வாடகை,
காய் கறி, பால் தயிர், பீட்ஸா
விலை ஏறுது!
போர் நின்றாலும், வெடிப் புகை
ஆறினாலும்
ஏறிய விலை ஒருபோதும்
இறங்கா!
சரித்திரம் மீளுது தரணியில்!
மரிப்பான்,
ஹிட்லர் ஆன புட்டின்
விட்டில் போல்!