ஊடகத்தாருக்கு – மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
தென்மார்க்கு நாட்டில் தென் கயிலை ஆதீனம் (திருகோணமலை) இளைய பட்டம் மீது தாக்குதல்.
காலம்: இன்று வைகாசி 8 புதன்கிழமை (22. 5. 2024) காலை 11.30 மணி
இடம்: புது தில்லி சாணக்கியபுரி இராதாகிருஷ்ணன் சாலை தென்மார்க்கு தூதரகம்.
பங்கேற்றோர்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அருச்சுனர் சம்பத்தர், இமக பொறுப்பாளர் வாலாசா கண்ணன், ஆன்மிகர் சோமசுக்கந்தர் குருக்கள், கல்வியாளர் சரவணன்.
தென்மார்க்கில் சமூக ஈனர்களால் கொடும் தாக்குதலுக்கு உள்ளானவர் திருகோணமலை தென் கயிலை ஆதீனம் இளைய பட்டம் தவத்திரு திரு திருமுருகன் தம்பிரான் சுவாமிகள்.
தென்மார்க்கில் அருள்மிகு வேல்முருகன் திருக்கோயில் பூசகராகப் பணியாற்றி வந்தார்.
நான்கு பேர் முகமூடியுடன் வந்தனர். நள்ளிரவில் வந்தனர். சுத்தியல்களால் அவரைத் தாக்கினர். கொல்ல முயன்றனர்.
செய்தி அறிந்த திருக்கோயிலார் குருதி கொட்டக் கொட்டப் பூசகரை மருத்துவமனையில் சேர்த்தனர். இளை கட்டிப் புண்கள் மாறி வருகின்ற நிலையில் உள்ளார்.
கோயில் அருச்சகருக்காக நீதி கேட்டும் உரிய விசாரணை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரியும் வருங்காலத்தில் இத்தகையன நடைபெறாமல் தடுக்க வேண்டியும் தமிழ்த்திரு அர்ச்சுனர் சம்பத்தர் இந்து மக்கள் கட்சி சார்பில் எழுத்து மூலமாக கோரிக்கையை புது தில்லியில் உள்ள தென்மார்க்குத் தூதரகத்தில் இன்று கையளித்தார். அவரோடு திரு கண்ணன், தவத்திரு சோமாசுக்கந்தக் குருக்கள் மற்றும் திரு. சரவணன் தூதரகத்துக்குச் சென்றனர்.படங்கள் பார்க்க.