எஸ். நெடுஞ்செழியன்

அவள் …
பள்ளியில்  படிக்கும்போது 
முதுகில்  புத்தகச் சுமை .
பருவம் வந்த போது 
மனதில் பல  சுமைகள் .
கண்களில்  கனவுச் சுமைகள் .
கணவனைக் கைப்பிடித்தபோது 
கட்டிலில் அவன் சுமை.
அதற்கு 
அவன் தந்தது 
வயிற்றில்  சுமை.
பத்து மாதம் கழித்து-அதற்குப் 
பால் புகட்டும் போது 
மடியில்  சுமை -அதைத் 
தூங்க  வைக்கும் போது 
தோளில்  சுமை .
இடுகாட்டிலும் ……..இவள் வேகும் வரை 
இவள் உடல்  சுமப்பது 
விறகு சுமை .
இறுதி வரை 
இவள்  ஒரு  சுமைதாங்கியே .
அவளுக்கோ 
இதுவெல்லாம் … சுகமான சுமைகளே !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுகமான சுமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *