தமிழக முதல்வருக்கு இயக்குநர் அமீரின் வேண்டுகோள் – செய்திகள்
சென்னையில் 14 -12 -2011 முதல் நடைபெறவுள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள விழாக்குழுவினர் தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது குறித்து இயக்குநர் அமீர் அவர்கள் வெளியிட்டுள்ள வேண்டுகோள் :
“மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, 14 டிசம்பர் 2011 முதல் சென்னையில் நடைபெற இருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள மாண்புமிகு தமிழ முதல்வருக்கு விழாக்கமிட்டி குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். உண்மையில் தரமான தமிழ் சினிமாக்களையும் மூன்று தேசிய விருது பெற்ற தமிழ் படமான ‘தென் மேற்கு பருவக்காற்று’, இந்தியன் பனோரமாவில் கலந்து கொண்ட தமிழ் படமான ‘செங்கடல்’ போன்ற திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்த விழாக் கமிட்டி குழுவினர் செயல் வருத்தத்திற்குரியது. மேலும் தமிழக அரசின் நிதியாக ரூ. 25 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய விருது பெற்ற திரைப்படத்தை புறக்கணித்தது வருத்தமளிக்கிறது. ஆகவெ பாரபட்சமாக நடைபெறக்கூடிய இந்த திரைப்பட விழாவில் மாண்புகிகு தமிழ முதல்வர் அவர்கள் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற மாபெறும் தவறினை விழாக் கமிட்டியினர் செய்யக்கூடாது என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.”