செய்யாத தப்புக்குத் தண்டனை உண்டா?

0

தொகுப்பு: சிரிப்பானந்தா

சில நகைச்சுவைத் துணுக்குகள் உங்களுக்காக:
===================================

“என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது”
“இப்போ சொல்லி என்ன பிரயோசனம்? வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்”

===================================

“நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்”
“உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப் படுக்கச் சொன்னாங்க?”

===================================

“எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?”
“ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால ‘டச்’ விட்டுப் போச்சுய்யா.”

===================================

“உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!”
“ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!”

===================================

“ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!”
“எப்படி?”
“என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.”

===================================

“ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.”
“பையன் என்ன பண்றான்?”
“டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்.”

===================================

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!

===================================

கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் வீட்டுப் பாடம் (home work) செய்யலை சார்.

===================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.