கண்ணைப் போல காப்போம்
நினைத்துப் பார்க்க முடியுமா?
உண்மை இல்லா வாழ்க்கையை – நாமும்
வாழ்ந்து காட்ட முடியுமா?
புழுக்களும் பூச்சிகளும் இல்லா – உலகில்
நாமும் வாழ முடியுமா?
பூக்களும் செடிகளும் இல்லா – உலகை
நினைத்துப் பார்க்க முடியுமா?
புல்லும் மரமும் இல்லா – நாட்டை
எண்ணிப்பார்க்க முடியுமா?
விலங்கும், பறவையும் இல்லா – காட்டை
யோசித்துப் பார்க்க முடியுமா?
காடுகள் இல்லா நாடுகள் – ஏது
கண்ணால் காட்டு பார்க்கலாம்
காடுகள் தந்த நாடுகளை – நாம்
கண்ணைப் போல காத்திடலாம்
குழந்தை பாடல்: -மொ.பாண்டியராஜன்
ஓவியம்: தூரிகா