வளர்ந்த குழந்தைகளின் கொண்டாட்டம்
தூரிகை சின்னராஜ்
குழந்தைகள் தினவிழா என்றாலே குழந்தைகள் மட்டுமே பங்கேற்று கொண்டாடிவரும் வேளையில், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வளர்ந்த குழந்தைகளான ஆசிரியர்கள் கொண்டாடிய வண்ணமயமான குழந்தைகள் தினவிழா நம்மை வியக்க வைத்தது.
தஞ்சையில் அமைந்துள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்கள் மேடை ஏறி அசத்தினார்கள். தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் பாட்டு , நடனம், மாறுவேடம், நாடகம், என விதவிதமான தோற்றத்தில். மேடைஏறி குழைந்தைகளை மகிழ்வித்தனர். “இறுக்கமான இன்றைய குழந்தைகளின் மனநிலையை போக்கிட இத்தகைய விழாக்கள் உதவுவதுடன் மாணவர்களிடையே கற்றலில் நெருக்கமான ஒரு இணக்கத்தை ஏற்படுத்த இயலும்” என்று குறிப்பிடுகிறார் பள்ளியின் முதல்வர் ஏ. என். சுர்யவதி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நுலகர். சசிகுமார் குறிப்பிடுகையில் “குழந்தைகளின் உள்மனதை அறிந்துகொள்ள நாமும் ஒரு நாள் குழந்தைகளாகவே மாறினால் என்ன என்கிற சிந்தனையே இநத வித்தியாசமான நிகழ்ச்சியை நாங்கள் நோக்கி எங்களை நகர வைத்தது. ஆசிரியர்கள் தங்களை அவ்வப்போது குழந்தைகளாகவும் மாற்றிக்கொண்டால் கற்பிப்பதிலும்,கற்றலிலும் புதிய அணுகுமுறைகள் ஏற்படும் என்றார்.”
It is very nice to read the article. Really, I feel the children would enjoyed.