மலேசியாவில் மோனிகா கொண்டாடிய பொங்கல் விழா – செய்திகள்
TBO தொலைக்காட்சி நிறுவத்தினர் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பிற்காக மலேசிய நாட்டிற்குச் சென்று அங்கு வாழும் தமிழர்களுடன் சிறப்பு பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.
இந்த சிறப்பு பிரம்மாண்டப் பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை மோனிகா கலந்து கொண்டு, பொங்கல் வைத்து, மலேசிய தமிழ் மக்களுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக திரைப்பட நடிகர் புழல் படத்தின் நாயகனுமான முரளி உடன் சென்றார்.
08 ஜனவரி 2012 காலை 9 மணிக்குத் துவங்கிய இப்படப்பிடிப்பு மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. பொங்கல் வைத்து படைக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் நடிகை மோனிகாவும் நடிகர் முரளியும் பங்கேற்று ஆடிப் பாடி மக்களை மகிழ்வித்தனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பிற்காக TBO தொலைக்காட்சிக் குழுவினர் மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். TBO நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜெயப்பிரகாஷ், தொழில் நுட்ப அதிகாரி சேதுராமன், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரமேஷ்குமார், ஒளிப்பதிவாளர் முரளி ஆகியோர் இப்படப்பிடிப்பை ஐந்து நாட்கள் தொடர்ந்து நடத்தினர்.