வல்லமை நிறைந்த இந்து ஆசிரியர் ராமிற்கு வல்லமையின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!
தலையங்கம்
The greatest asset of The Hindu, founded in september 1878, the Code begins, is trust. Everything we do as a company revolves, should continue to revolve, round this hard-earned and inestimable long-term asset. The objective of codification of editorial values is to protect and foster the bond of trust between our newspapers and their readers.- N.Ram.
த. இந்து நாளிதழ், 1878, செப்டம்பர் 20 ல் தொடங்கப்பட்ட தினசரிப் பத்திரிக்கை, சுதந்திரப் போராட்ட இயக்கம், பலப்பல சரித்திர நிகழ்வுகள், இயற்கைச் சீற்றங்கள் என்று 133 ஆண்டுகள் சரித்திரத்தை நடுநிலையுடன் வெளிக் கொண்டுவந்து கொண்டிருக்கும் , பத்திரிக்கை உலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் , கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பிரதிகள் விநியோகம் மூலமாக இந்தியாவின் மூன்று முக்கியமான ஆங்கில இதழ்களின் ஓர் இடத்தையும், தென் இந்தியாவின் முதல் இடத்தையும் பற்றிக் கொண்டிருக்கும் , நம்பிக்கைக்குப் பாத்திரமான உயர் தரமான நாளிதழ்! இன்று ஒரு திருப்பு முனையாக புதிய ஆசிரியர் குழுவைச் சந்திக்கிறது.
நரசிம்மன் ராம், என். ராம் வயது 67, இந்திய இதழியலாளர், த. இந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியராக 9 ஆண்டுகள் பணியாற்றிய சாதனையாளர். இந்து இதழ் குழுமத்தின் மற்ற வெளியீடுகளான பிரண்ட்லைன், ஸ்போர்ட்ஸ்டார், பிசினஸ்லைன் ஆகிய இதழ்களையும் திறம்பட நிர்வகித்து வந்தவர். இந்திய அரசாங்கத்தால் பத்ம பூசண் விருது வழங்கப் பெற்றவர்.
சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டமேற்படிப்புப் பள்ளியில் ஒப்பீடு இதழியலில் எம்.எஸ்.பட்டமும் பெற்றவர். 1977 ஆம் ஆண்டில் தமது குடும்ப நிறுவனமான த. இந்து நாளிதழின் இணை தொகுப்பாசிரியராக தமது பணியைத் துவங்கியவர். 1980ல் வாசிங்டன் செய்தியாளராகப் பணியாற்றியவர். ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தின் போது, போபர்ஸ் ஊழல் பற்றிய செய்திகளை வெளிக் கொணர்ந்தமைக்காக பெரிதும் பாராட்டப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சவால்களையும், எதிர்ப்புகளையும் திறம்படச் சமாளித்து பத்திரிக்கையின் தரத்தைக் காத்து வந்தவர்.
கொழும்பில் நடைபெற்ற இந்திய இலங்கை சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றிய போது ஐக்கிய இலங்கை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளதும், வடக்கு கிழக்கிற்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பகமானதும், முதன்மையானதுமான தமிழ் பிரதிநிதித்துவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதும் இவர் ராஜபக்சேவிற்கு நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் இந்த மகத்தானப் பொறுப்பை , சித்தார்த் வரதராஜன், மற்றும் பிசினஸ்லைன் பத்திரிக்கை ஆசிரியராக சம்பத் குமாரும், பிரண்ட்லைன் ஆசிரியராக, விஜய சங்கரும், ஸ்போர்ட்ஸ்டார் ஆசிரியராக நிர்மல் சேகரும் பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள். தொடர்ந்து நல்ல முறையில் இந்து நாளிதழ் வெளி வரவும், மேலும் பற்பல சாதனைகள் புரியவும், நம் வல்லமை மின்னிதழ் மனமார வாழ்த்துகிறது! நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் போன்று தம் நீண்ட கால பத்திரிக்கைத் துறை அனுபவங்களையும், வல்லுநர்களின் தொடர்புகளையும், வளர்ந்து வரும் இளம் பத்திரிக்கையாளர்களுக்குப் பயன்படும் வகையில் பகிர்ந்து கொண்டு நல்ல பத்திரிக்கையாளர்களை உருவாக்க உதவி புரிய வேண்டியதும் அவசியமாகிறது.
படங்களுக்கு நன்றி :
http://www.tamilsydney.com/content/view/1531/37/
http://www.theflowerboutique.ie/
ஹிந்து நாளிதழின் வருங்காலம் பற்றி தமிழகம் கவலைப்படும். உரிய தருணத்தில் அரிய கட்டுரை வடித்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். இந்த ‘ஹிந்து’வின் ஜனனம். செப்டம்பர் 1878. கருவுற்றது திருவல்லிக்கேணியில். அந்த வரலாற்றுக்கதை சுவை பட இருக்கும்.