சிற்ப சாஸ்திரம் – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள வித்தியாசமான புதிய நிகழ்ச்சி ‘சிற்ப சாஸ்திரம்’.
இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் பாரம்பரியமிக்க பல்வேறு விஷயங்களில் சிற்பக் கலையும் ஒன்று. சிற்பியின் சிந்தனையில் செதுக்கப்பட்டு காண்போரின் சிந்தனையைக் கவரும் பல்வேறு சிலைகள் உருவான வரலாறு, அவை வடிவமைக்கப்பட்ட காலம் அதற்கான நேரம், அதற்கு மூலமான கற்கள் கொண்டுவரப்பட்ட இடம், தன்மை போன்ற அரிய அற்புதத் தகவல்களுடன் இந்நிகழ்ச்சி அரங்கேற உள்ளது.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் செல்வி. அஸ்வினியுடன் பிரபல சிற்பக் கலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீ மதி பொன்னி செல்வநாதன் பங்கேற்று பல சுவையான தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.
ஒரு மணிநேரம் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சி சிலைகள் செய்யப்படும் சிற்ப தொழிற் கூடங்களிலும் படமாக்கப்பட உள்ளது இந்நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு.