முயல் – திரைப்படம்

உலக அளவில் முதல் முறையாக அனைத்து போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் சுமார் 5000 பேர்கள் இணைந்து பி அண்ட் வி எண்டர்டெய்ன்மெண்ட் பி.லிட் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாகத் தாயரிக்கும் படம் ’முயல்’.

இப்படத்தில் புழச், கண்டுபுடி கண்டுபுடி ஆகிய படங்களில் நடித்த முரளி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘பேராண்மை’ படத்தில் நடித்த சரண்யா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்முமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீரா கிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சனி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதுவரை தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு துன்பத்தையும் சந்திக்காமல் எப்போதுமே சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கை முடித்துவிட்டு ஏதாவதுஒரு பிஸினஸ் செய்யலாம் என்று கிளம்பும் போது அவர்களது வாழ்க்கையை ஒரு மிகப்பெரிய சம்பவம் புரட்டிப் போடுகிறது. அதனால் பாதிக்கப்படும் அவர்கள் இனிமேல் யாருக்கும் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வரக்கூடது அதற்கு என்ன செய்யலாம்? என்று நினைக்கும் அவர்கள் இந்த உலகத்தில் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்பதை தங்களது சீரிய முயற்சியின் மூலம் நிரூபிப்பது தான் இப்படத்தின் கதை. காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட், சண்டைக் காட்சிகள் என எல்லாம் கலந்த கலவையாக இப்படத்தை இயக்குகிறார் ஒளிப்பதிவாளர் எஸ். பி. எஸ். குகன். இவர் ஏற்கனவே தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘மதுரை டூ தேனி வழி: ஆண்டிப்பட்டி’ மற்றும் உலக சினிமாவில் முதல் முறையாக ஸ்டில் கேமராவில் முழுப்படத்தையும் ஒளிப்பதிவு செய்து லிம்கா மற்றும் எலைட் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்தையும் தயாரித்து ஒளிப்பதிவு செய்தவர். இவர் முதல் முறையாக ‘முயல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி மதுரை, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பு நடைபெறுகிறது. சிம்லா, மலேசியா ஆகிய இடங்களில் படத்தின் பாடல் காட்சிகள் மிகப் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ளன. எம். ஆர். சரவணக்குமார் ஒளிப்பதிவு செய்ய படத்தின் பாடல்களை தமிழ்ச்செல்வன், செல்வராஜா, சுகுமாரன் ஆகியோர் எழுதுகிறார்கள். படத்திற்கு இசையமைக்கிறார் ஜே. வி. சஞ்சீவ் கண்ணா நடனம் அமைக்க, சண்டைக்காட்சிகளை ‘ஆக்‌ஷன்’ பிரகாஷ் கவனிக்கிறார். வியாபார நிர்வாகத்தை ஆர். ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார். தயாரிப்பு நிர்வாகம்: ஆத்தூர் ஆறுமுகம், நிர்வாகத் தயாரிப்பு: விநாயகா சண்முகம்.

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க