ககன சாரிகை-4
இன்னம்பூரான்
1.21: சமரிடும் போது, ஐந்து அசையா நிலைகளை மறக்கலாகாது;
1.22: அவையாவன: அறநெறி, விண்ணுலகம், மண்ணுலகம், தளபதி, பண்பாட்டில் அமர்ந்த, கட்டுப்பாடும்.
1.23: வேந்தன் அறநெறியைப் பின்பற்றினால், மக்கள் அவனுடன் ஒத்துழைத்து இயங்குவார்கள், உயிரைத் திருணமாகப் பாவித்து. எந்த அபாயமும் அவர்களைப் பயமுறுத்த இயலாது;
1.24: விண்ணுலகம் என்று யாம் கூறுவது: பகலும், இரவும், குளிரும், வெம்மையும், பெரும் பொழுதும், சிறு பொழுதும்;
1.25: மண்ணுலகம் என்று யாம் கூறுவது: அருகிலும், நெடுதூரத்திலும் உள்ள தொலைவுகள், அபாயமும், காவல் துணையும், திறந்த வெளியும், சந்து பொந்துகளும், வாழ்வும், சாவும்.
அடுத்தக் கட்டம் போகு முன்:
ஸன் ட்ஸு அவர்கள் தனது ஞான போதனையை ‘சமர் கலை’ என்று நாமகரணம் செய்த போது, அவர் சண்டைக்கும் சச்சரவுக்கும் யுத்திகள் படைக்கவில்லை. வாழ்வியல் படிப்பினைகள் பலவற்றை இங்கு காணலாம். உற்றுக் கவனித்தால் புலப்படும் உண்மைகளும், படிப்பினைகளும் சிலருக்கு ஆர்வத்தைத் தோற்றுவிக்கலாமோ என்னவோ? யான் அறியேன். ஐயனாரிதனாரும் இந்த வகையில் பேசியிருக்கிறார். பார்க்கலாம்.
இப்போதைக்கு ஒரு அட்டவணை:
பெரும்பொழுது:
சித்திரை,வைகாசி |
இளவேனில்காலம் |
ஆனி, ஆடி |
முதுவேனில்காலம் |
ஆவணி,புரட்டாசி |
கார் காலம் |
ஐப்பசி,கார்த்திகை |
குளிர்காலம் |
மார்கழி, தை |
முன்பனிக்காலம் |
மாசி, பங்குனி |
பின்பனிக்காலம் |
சிறுபொழுது
வைகறை
|
விடியற்காலம்
|
காலை
|
காலை நேரம் |
நண்பகல்
|
உச்சி வெயில் நேரம்
|
எற்பாடு
|
சூரியன் மறையும் நேரம்
|
மாலை
|
முன்னிரவு நேரம்
|
யாமம்
|
நள்ளிரவு நேரம் |
படத்திற்கு நன்றி: http://history.cultural-china.com/en/49History5428.html