காயத்ரி பாலசுப்ரமணியன் 

மேஷம்: குரு 1-ல். மாணவர்களுக்குத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தக் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால், கல்வி வளம் சிறப்பாக இருக்கும். 2-ல் கேது. இந்த வாரம்  வேலைச்சுமையால் பணியில் உள்ளவர்களின் பதட்டம் அதிகரிக்கலாம்.  5-ல் செவ்வாய். வீண்  போட்டிகள் குறைய வியாபாரிகள் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். 7-ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பிப்  புதுப் பொறுப்புக்களை   எடுக்க வேண்டாம். 8-ல் ராகு. வெளியூரில் தங்கியிருப்பவர்கள், தேவையில்லாமல்,  நண்பர்களுடன் பேசிப் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமலிருப்பதே புத்திசாலித்தனம். 10-ல் சூரியன்.   வியாபாரத்தில் உள்ள  நெருக்கடிகள் மாறுவதால், சுய தொழிலில் உள்ளவர்கள்  எடுக்கும்  முயற்சிகளுக்கு நல்ல  பலன் கிடைக்கும்.  11-ல் புதன், 12-ல் சுக்ரன்.  கலைஞர்களுக்கு  எதிர்பார்த்த பணவரவு உண்டு.

இ(ந)ல்லறம்: பெண்களுக்குக் குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறித் தெளிவு பிறப்பதோடு  பணப் பற்றாக்குறையும்  நீங்கும். இந்த வாரம் உறவுகளால், சில தொல்லைகள் வந்து போனாலும் பெண்கள் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றிப்   பேசாமலிருந்தால்,  உறவுகள் சீராக இருக்கும்.

ரிஷபம்: 6-ல் சனி. உத்யோகத்தில் இருந்த  வீண்பழி, மோதல்கள், ஆகியவை நீங்குவதால் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் விளங்குவார்கள். 11-ல் சுக்ரன்.   கலைஞர்களுக்குத்   தடைபட்டுக் கிடந்த காரியங்களில் நல்ல முன்னேற்றம்    இருக்கும். புதன்  10-ல். வியாபாரத்தில் உள்ள  நெருக்கடிகள் மாறுவதால், வியாபாரிகளின் புதியத் திட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் வந்து  சேரும். 1-ல் கேது.  ஒப்பந்த  அடிப்படையில் வேலையில் சேர்பவர்கள்  அதற்குரிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் படித்துப் பார்த்து பின்னர் கையெழுத்திடுவது நல்லது. 4-ல் செவ்வாய். பொறுப்பில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பிருக்கும். 7-ல் ராகு. புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். 9-ல் சூரியன்.  வேலையின் பொருட்டுச் சிலர் வீட்டைப் பிரிந்து   வெளியூரில் வசிக்கும் நிலை ஏற்படும். 12-ல் குரு. மாணவர்கள் அவசரப்பட்டுப் பேசிச் சங்கடங்களில் சிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இ(ந)ல்லறம்: உறவினர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் வந்து சேருவதில் காலதாமதம் ஏற்படும் சூழலிருப்பதால் பெண்கள்  குடும்ப வரவு, செலவு இரண்டிலும் கருத்தாக இருப்பது நல்லது. பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கிற்கு ஏற்பச் செயல்பட்டால், குடும்ப அமைதி சிதறாமல் இருக்கும்.

மிதுனம்: 3-ல் செவ்வாய். பணியில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் தானே வந்து சேரும்.  11-ல் குரு. கணினித் துறை பயிலும் மாணவர்களுக்குச்  சலுகைகளுடன் கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 6-ல் ராகு. வியாபாரிகள் மேற்கொள்ளும்  பயணத்     திட்டங்கள் நல்ல பலனளிக்கும்.  5-ல் சனி. சுய தொழில் புரிபவர்களுக்குத் தொழில் விவகாரங்களில் சில சிறு பிரச்சனைகள் ஏற்படலாம், 8-ல் சூரியன். பொது வாழ்வில் இருப்பவர்கள், தங்கள் உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்கக்  கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.  9-ல் புதன். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்தாலும், பணவரவு என்பது பேச்சளவில்தான் இருக்கும். 10-ல் சுக்ரன். வெளி நாடுகளுக்கு வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் இருப்பவர்கள் சற்று யோசித்துச் செயல்படுவது நல்லது. 12-ல் கேது. சிறு தொழில் செய்பவர்கள் அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்டாமல் கவனமாக இருப்பது அவசியம்.    

இ(ந)ல்லறம்: இல்லற இனிமை பெண்களின் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நல்ல தூண்டு கோலாய் அமையும். இந்த வாரம் உறவுகளின் ஆதரவு இருந்தாலும், பண விவகாரங்களில், புதியவர்கள் எவரையும் நம்பி எந்தச் செயலும் செய்ய  வேண்டாம். வீண் வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.

கடகம்: 11ல் கேது. இந்த வாரம், வியாபாரிகளுக்கு  மன மகிழ்ச்சியையும், மன    நிறைவையும் கொடுக்கக் கூடிய வாரமாக அமையும். 9-ல் சுக்ரன். திருப்திகரமான வரவு கலைஞர்களின்  சேமிப்புக்குக் கை கொடுக்கும் விதமாக அமையும்.  8-ல் புதன்.  எடுத்த காரியங்கள் யாவும் நிறைவேறுவதால், மாணவர்கள்,  எதிலும் வீறு நடை         போடுவீர்கள். 2-ல் செவ்வாய்.  பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளில்     கவனமாக இருப்பது அவசியம். 4-ல் சனி. முதியவர்களுக்கு உடல் ரீதியான உபாதைகளால் மன உற்சாகம் குறைந்து காணப்படலாம். 5-ல் ராகு.  சுய தொழில் புரிபவர்களுக்கு  வெளியூரிலிருந்து வரும் தகவல்கள் மனதிற்குத் திருப்தி அளிக்கும் வகையில் இருக்காது.  7-ல் சூரியன். மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருத்தல் நல்லது. 10-ல் குரு. வண்டி வாகனம் வைத்திருப்பவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வீண் அபராதங்களைத் தவிர்த்து விடலாம்.

இ(ந)ல்லறம்: குடும்பத்தில்  புதிய நபர் வருகையால் பெண்களுக்கு, வேலைப்பளுவும், அதனால் மன உளைச்சலும் ஏற்படும். இந்த வாரம் வரவுகளில் சிறிது தாமதம் இருக்கும் வாய்ப்பிருப்பதால்,  வீண் செலவுகளைச் சுருக்குவதோடு  எதிலும் அகலக் கால் வைக்க வேண்டாம்.

சிம்மம்: 3-ல் சனி. மாணவர்கள் செய்யும் எந்தச் செயலிலும் சிறந்த ஆக்கத்திறன் வெளிப்படும். 9-ல் குரு.  வேலையில் இருப்பவர்கள் பணியில் தீவிரம் காட்டிப் பாராட்டுப் பெறுவார்கள்.  6-ல் சூரியன். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமான பதில் கிடைக்கும். 8-ல் சுக்ரன்.  வார இறுதியில் கலைஞர்களுக்கு  விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். 1-ல் செவ்வாய்.  வியாபாரிகள் பங்குச் சந்தையின் நெளிவு, சுளிவு அறிந்து செயல்படுவது அவசியம். 4-ல் ராகு.  பொது வாழ்வில் இருப்பவர்கள்  எல்லா விஷயங்களிலும் கண்ணும் கருத்துமாக இருந்தால், வீண் தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். 7-ல் புதன். பணியில் இருப்பவர்கள், காரியத் தடைகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே வேலைகளில் கவனமாக இருக்கவும் .  

இ(ந)ல்லறம்: இந்த வாரம், பெண்கள், கோபத்தைக் கட்டுப் படுத்துவது மூலம், சின்னச் சண்டைகள் பெரிதாகாமல் தவிர்த்து விடலாம். பிள்ளைகள் பிடிவாதத்துடன் நடந்து கொள்வதால் குடும்பத்தில் வீண் வருத்தங்கள் வந்து போகும். எனவே சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுப்பதே புத்திசாலித்தனம்.

கன்னி: 6-ல் இருக்கும் உங்கள் ராசிநாதனான புதன், உங்கள் மனதில் இருக்கும், குழப்பங்களை நீக்குவதால், மீண்டும் பழைய உற்சாகம் உங்களைத் தொற்றிக் கொள்ளும். 3-ல் ராகு. விளையாட்டு வீரர்கள் அவர்களுக்கு உரிய பாராட்டோடு, விரும்பிய    அங்கீகாரத்தையும் பெறுவார்கள். 2-ல் சனி. மாணவர்கள் நண்பர்களிடம்  வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். 5-ல் சூரியன். பணியில் உள்ளவர்களுக்கு, எதிர்பாராத பின்னடைவுகளால் மன அமைதிக் குறைவு உண்டாகலாம். 7-ல் சுக்ரன். கலைஞர்கள் பேச்சில் கவனம் வைக்கவும். இல்லாவிட்டால் உங்கள் நன்மைகளை நீங்களே தடுத்து விடக்கூடும். 8-ல் குரு. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு,  ஒரே விதமான சலிப்பூட்டும் போக்கால் சில தொல்லைகள் வந்து போகும். 9-ல் கேது.  கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு குறைய இடம் கொடுக்காமல் செயல்படுவது புத்திசாலித் தனம் 12-ல் செவ்வாய். மருந்துப் பொருட்களை வாங்கி விற்பவர்கள் மன நிறைவு இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். 

இ(ந)ல்லறம்: இந்த வாரம் கர்ப்பிணிப் பெண்கள் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியப் பணி, தங்களின் உடல்நிலையை கவனமாகப் பாதுகாத்துக் கொள்வதுதான்! அத்துடன் வாகனம் வாங்கும் முயற்சிகளில் இறங்கும் போது யோசித்துச் செயல்பட்டால், தேவையற்ற பணக்கஷ்டம் உண்டாகாமலிருக்கும்.        

துலாம்: சுய தொழில்  புரிபவர்களுக்குத் தொழில் வகையில் இருந்து வந்த போட்டிகளும், சங்கடங்களும் விலகித், திட்டம் தீட்ட 7-ல் இருக்கும்,  குரு உறுதுணையாய் இருப்பார்.    11-ல் செவ்வாய். இந்த வாரம்  பணியில் உள்ளவர்கள் உற்சாகமாக வேலைகளில் ஈடுபடும் படியான சூழ்நிலை உருவாகும். 1-ல் சனி. வியாபாரிகள், சவாலாக அமையும்     இன்னல்களைச் சமாளிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுவர்.      2-ல் ராகு. தொழில் வகையில் ஏற்படும் சிறு முடக்கத்தைத் தவிர்க்க, சிறு தொழில் புரிபவர்கள், கவனமாக இருக்கவும்.     4-ல் சூரியன். பொது வாழ்வில் இருப்பவர்கள், உங்கள் உடல் நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். 5-ல் புதன்.   மாணவர்கள் தலைக்கனத்திற்கு இடம் கொடுக்காமல் இருப்பதே நல்லது. 6-ல் சுக்ரன். கலைஞர்கள், தன் தொழிலில் உரிய கவனத்தைச் செலுத்தி வந்தால், வரவுகளைத் தக்க வைத்துக் கொள்ளலாம். 8-ல் கேது. வீடு, மனை சம்பந்தமானப் பிரச்சினைகளை நிதானமாகக் கையாளவும்.

இ(ந)ல்லறம்: இந்த வாரம் குடும்பத்தில், சில நெருக்கடிகள் இருந்தாலும், பெண்கள்  திறமையாகச் செயல்பட்டால், நிலைமை ஓரளவு சுமூகமாக இருக்கும். பிள்ளைகள்   உடல் ரீதியான உபாதைகளால் மன உற்சாகம் குறைந்து காணப்படலாம். எனவே அவர்களுக்கு, ஆரோக்கியமான உணவுகளை அளிக்கவும்.   

விருச்சிகம்: 3-ல் சூரியன்.  உயர் பதவி தொடர்பான சில வேலைகள் சிரமம் இல்லாமல் சுலபமாக முடிவதால் பணியில் உள்ளவர்கள் மகிழ்வுடன் திகழ்வார்கள். 4-ல் புதன். இந்த வாரம் தேடி வரும் வழி காட்டுதல், மாணவர்கள் மனதில் நம்பிக்கை உண்டாக்கும். 5-ல் சுக்ரன். கலைஞர்களுக்குத் தொழிலைப் பொறுத்த வரையில் நல்ல முன்னேற்றகரமான நிலைமை ஏற்படும். ராசியில் ராகு. பொறுப்பில் இருப்பவர்களை ஓயாத உழைப்பும், அலைச்சலும் துரத்திக் கொண்டே இருக்கும்.! 6-ல் குரு.  சுய தொழில் புரிபவர்கள் உழைப்புக்கேற்ற லாபம் பெற முடியவில்லையே என்ற நிலையில் இருப்பார்கள். 7-ல் கேது. பொது வாழ்வில் உள்ளவர்கள், தங்களைச் சுற்றியுள்ள விவகாரங்களைச் சமாளிக்க உறுதியாய் செயல்பட வேண்டும். 10-ல் செவ்வாய். பணியில் உள்ளவர்கள், வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். 12-ல் சனி.  முதியவர்களுக்கு  உடல் அசதி, சோர்வு, ஆகியவை அவ்வப்போது வந்து தலை காட்டும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் கனிவாகப் பேசினால், சொந்த பந்தங்களிடையே இருந்து வந்த மனக்கசப்பு விலகிச் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்து சேரும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். அத்துடன் சத்தான உணவு வகைகளை உண்ணுவது நல்லது.

தனுசு: 5-ல் குரு. திருப்திகரமானப் பண வரவு வியாபாரிகளின்  சேமிப்புக்குக் கை கொடுக்கும் விதமாக அமையும்.      6-ல் கேது. சுய தொழில் புரிபவர்களுக்கு வாய்ப்புகளுக்கேற்ற வரவோடு, உரிய பாராட்டுக்களும் வந்து சேரும்.  11- ல் சனி.  செய்த வேலைக்குப்  பாராட்டு கிடைப்பதால் பொறுப்பில் இருப்பவர்கள் மகிழ்ச்சியுடன் விளங்குவார்கள். 4-ல் சுக்ரன். கலைஞர்கள் திறமையின் அடிப்படையில் முதலிடம் பெறுவார்கள். 2-ல் சூரியன். சுய தொழிலில் இருப்பவர்கள், தடபுடவென்றுச் செயலில் இறங்காமல், நிதானித்துச் செயல்படவும். 3-ல் புதன். மாணவர்கள் கருத்துப் பரிமாற்றத்தில் இனிமை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேலைகள் சுலபமாய் முடியும்.  9-ல் செவ்வாய். வெளியூர் செல்பவர்கள், பயணங்களின் போது புதியவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். 12-ல் ராகு. பணியில்  உள்ளவர்கள் அன்றாட அலுவல்கள் தேங்காமல் பார்த்துக் கொள்வது புத்திசாலித் தனம்.

இ(ந)ல்லறம்: தாமதம் அடைந்து வந்த சுபகாரியங்கள் நிறைவேறும் வாய்ப்பிருப்பதால், பெண்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். இந்த வாரம் உயர் கல்விக்காகப் பிள்ளைகள் மேற் கொள்ளும் முயற்சிகளில் சிறிது குழப்பம் இருந்தாலும், வார இறுதியில் நிலைமை அவர்களுக்குச் சாதகமாக  அமைந்து விடும்.           .

மகரம்: 11-ல் ராகு. வேலையில் இருப்பவர்கள் பணியில் தீவிரம் காட்டிப் பாராட்டுப் பெறுவார்கள். 3-ல் சுக்ரன். கலைஞர்களுக்கு, வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.  1-ல் சூரியன். பொறுப்பில் உள்ளவர்கள்,  தேவையற்ற விஷயங்களுக்காக மனதை அலட்டிக் கொள்ளும் சூழலிருக்கும். புதன் 2-ல். வியாபாரிகள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கவனமாய் இருந்தால், வேண்டிய பணப் புழக்கம் கையில் இருக்கும். 4-ல் குரு.  மாணவர்கள் கவனமாக இல்லையென்றால், நட்பு வட்டத்தில் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். 5-ல் கேது. சுய தொழில் புரிபவர்கள், அரசு வேலைகளை முடிக்க, நேரம் காலம் பாராமல் அலைய நேரிடும். 8-ல் செவ்வாய். விளையாட்டு வீரர்களுக்கு, உஷ்ணம் தொடர்பான உபாதைகள் அவ்வப்போது வந்து போகும். 10-ல் சனி. ஸ்திரச் சொத்துக்களின் சேர்க்கைக்கான முயற்சி சற்றுத் தள்ளிப் போகும்.

இ(ந)ல்லறம்: நிதானமும் பொறுமையும் கொண்டு விவேகமாகச் செயல்படும் பெண்களை நோக்கி வெற்றியோடு உறவுகளும்  தேடி வரும்.  பணியில் இருக்கும் பெண்கள்,  கண் சம்பந்தமான உபாதைகளுக்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.

கும்பம்: 2-ல் சுக்ரன்.  கடன் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கலைஞர்களுக்கு உழைப்பும், புத்திசாலித் தனமும் கை கொடுக்கும். 1-ல் புதன். வியாபாரிகள் போட்டியாளர்களைச் சமாளித்து வாய்ப்புக்களைத்  தக்க வைத்துக் கொள்வார்கள். 3-ல் குரு.  கணினித் துறையினர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால், கண் உபாதைகளைத் தவிர்த்து விடலாம். 4-ல் கேது. பொது வாழ்வில் இருப்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. 7-ல் செவ்வாய். ஒப்பந்தங்கள் பெற வியாபாரிகள் புது யுக்திகளைக் கடைப் பிடிப்பது அவசியம்.  9-ல் சனி. உடன் இருப்பவர்களே  காலை வாரும் சூழல் இருப்பதால், பணியில் இருப்பவர்கள், தன் சொந்தக் காலில் நிற்பதே நல்லது! 10-ல் ராகு. மாணவர்கள் நட்பு வட்டத்தில் அளவாக இருக்க, மன உளைச்சல்,  கவலை ஆகியவற்றைத் தவிர்த்து விடலாம்.  12-ல் சூரியன். அரசு வகை அனுகூலம் குறைவாக இருப்பதால் சுய தொழில் புரிபவர்கள் வரவு-செலவுக் கணக்கைச் சரியாக வைத்திருக்கவும். .

இ(ந)ல்லறம்: இந்த வாரம் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டும். பெண்கள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்பட்டால், வீண் செலவுகளைத் தவிர்த்து விடலாம்.  இந்த வாரம் உத்யோகத்தில் புதுப் பொறுப்புகள் உங்களைத்   தேடி வரும்.

மீனம்: 1-ல் சுக்ரன். அரசு அளிக்கும் சலுகை கலைஞர்களை உற்சாகப்படுத்துவதுடன், அவர்களின் திறமைகளை வெளியுலகுக்கு அழைத்து வருவதாக அமையும். 2-ல் குரு. வியாபாரிகளுக்குப்  பண வரவு திருப்திகரமாக இருக்கும். 3-ல் கேது. இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். 6-ல் செவ்வாய். வியாபாரிகளுக்கு உங்கள் உழைப்பிற்குரிய பலனோடு உரிய தொகையும் சேர்ந்து கிடைப்பதால், மனதில் சந்தோஷம் பூக்கும். 8-ல் சனி மற்றும் 9-ல் ராகு.  இந்த வாரம் பணியில் இருப்பவர்கள் சுறுசுறுப்பாகப் பணி புரிவதாலும், சில நேரம் சில்லறைத் தொந்தரவுகள் வந்து போகும். 10-ல் சூரியன். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்கள், தங்களின் அலுவலகத்தில்  செய்யும் மாறுதல்கள் மனதிற்கு இனிமை சேர்க்கும் விதமாக அமையும்.  12-ல் புதன். பொறுப்பில் இருப்பவர்கள், தேவையற்ற  மனக் குழப்பத்திற்கு இடம் தராமல் இருந்தாலே பாதிக் கவலை குறைந்து விடும்.

இ(ந)ல்லறம்: பெண்கள் குடும்ப விவகாரங்களில் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.   இந்த வாரம் உத்யோகத்தில் சாதகம், பாதகம் இரண்டும் கலந்து இருக்கும். எனவே வேலையில் இருப்பவர்கள் இயன்ற வரை உயர் அதிகாரிகளோடு  வாக்குவாதத்தில் இறங்க  வேண்டாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *