உடும்பன் படத்திற்கு தடை உத்தரவு
மாடர்ன் சினிமா சார்பில் s .ஜெகநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம் உடும்பன். இப்படத்தின் எழுத்து – இயக்கம்- இசை s.பாலன்.இதில் இந்தியாவின் no 1 பைக் ரேசர் திலிப் ரோஜர் ஹீரோவாக நடிக்கிறார்.அடுத்த மாதம் வெளிவர தயார் நிலையிலுள்ள இப்படத்திற்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. சென்னை சூளை சார்ந்த செல்வராஜ், (வனவிலங்கு ஆர்வலர்) சிட்டி சிவில் கோர்ட்டில் புகார் அளித்து, அதில் அழியும் இனமான உடும்பு இனத்தை கொடுமைப்படுத்தி இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த விவரங்களை கேட்டறிந்த நீதிபதி லக்ஷ்மிகாந்தன் இப்படத்திற்கு தடை உத்தரவு போட்டுள்ளார்.
இதைக் கேட்டறிந்த தயாரிப்பாளர் s .ஜெகநாதன் அதிர்ச்சியுற்றார்.
“நங்கள் படப்பிடிப்பிற்கு முன்னால் முறையாக வனவிலங்கு நலவாரியத் துறையிடம் (ANIMAL WELFARE BOARD OF INDIA )அனுமதி பெற்று நடத்தியுள்ளோம்,மேலும் இப்படத்திற்கு தணிக்கைக் குழு (CENSOR BOARD ) ” U “சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆகவே முறையாக எல்லா ஆவணங்களையும் செலுத்தி, இந்தத் தடைகளை சட்டப்பூர்வமாக அகற்றி திட்டமிட்டபடி படம் வெற்றிகரமாக திரையிடப்படும்” என்று கூறினார் தயாரிப்பாளர் s .ஜெகநாதன் .