பிரான்சு கம்பன் கழகப் பொங்கல், மு.வ. நூற்றாண்டு விழாக்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கம்பன் கழகம் பிரான்சு நடத்தும்

முனைவர் மு. வரதராசனார் 

நூற்றாண்டு விழா

தமிழப் புத்தாண்டுப் பொங்கல் விழா
அழைப்பிதழ்

நாள்
திருவள்ளுவர் ஆண்டு 2043-கும்பம்(மாசி)-07
19-02-2012 ஞாயிறு பிற்பகல் 14-00 மணி முதல் 20-00 மணி வரை

நிகழ்ச்சி நிரல் : 19ஃ02ஃ2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணி

மங்கல விளக்கேற்றுதல் : திருமிகு செல்வா உமா இணையர்

இறை வணக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து : கம்பன் கழக இளையோர் அணியினர்

நாட்டியம் : செல்வி சாரநாயகி கோபாலகிருட்டினன்

விழாத் தலைமை : திருமிகு கி. அசோகன்

வரவேற்புரை : திருமிகு தணிகா சமரசம்

மலர் வெளியிடு : முனைவர் மு. வரதராசனர் நூற்றாண்டு விழா மலர் : வெளியிடுபவர் : திருமிகு அ. நாகராசன்

மலர் பெறுபவர் : மருத்துவர் : த. சிவப்பிரகாசம் : திருமிகு செயசீலன்: திருமிகு தம்பி மார்க்

நூல் வெளியிடு : கவிஞா; அருணாசெல்வம் எழுதிய : நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்

வெளியிடுபவர் : கவிமணி ச. விசயரத்தினம்

நூல் பெறுபவர் : திருமதி பிரபா அசோகன் : திருமதி கோமதி சிவஅரி : திருமதி மல்லிகா செயமாமல்லன்

சிறப்புரை : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
தலைப்பு : முத்தமிழ் அறிஞர் மு.வ

பொங்கல் கவிதை : விருப்பம் உடையோர் கவிதை பாடலாம்
கவிதை 20 வரிகளுக்குள் இருக்க வேண்டும் 

 பொங்கல் பாட்டரங்கம்

தலைமை : கவிஞர் கி. பாரதிதாசன்

தலைப்பு : வள்ளுவரின் வாக்கு

கவிஞர் அருணாசெல்வம்
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் : கவிஞர் பாரிசு பார்த்தசாரதி 

பெண்ணின் பெருந்தக்க யாவுள : கவிஞர் பாமல்லன்

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று : கவிஞர் லினோதினி சண்முகநாதன்
ஞாலத்தின் மாணப் பெரிது : பட்டி மன்றம்

நடுவர் : பேராசிரியர் லெபோ பெஞ்சமின்

தலைப்பு : «ஊழ்» பற்றித் திருவள்ளுவர் உரைக்கும் கருத்துக்கள் இக்காலத்தில்  கொள்ளத்தக்கனவே – தள்ளத்தக்கனவே

கொள்ளத்தக்கன : திருமதி எலிசபெத் செல்வம்
 திருமதி சுகுணா சமரசம்
திருமதி செயந்தி பிரான்சுவா

தள்ளத்தக்கன : திருமதி லூசியா லெபோ
 திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்
 கவிஞா; அருணாசெல்வம்

நன்றியுரை : திருமிகு பழ. சிவஅரி

நிகழ்ச்சி தொகுப்பு
திருமதி சுகுணா சமரசம் – சிவகாமி சிவகுமார்

14-00 மணிக்கு மாணவ மாணவியர்க்கு ஓவியப் போட்டியும், மாதர்களுக்குக் கோலப் போட்டியும் நடைபெறுகின்றன.

விழா நடக்கும் இடம் :

SALLE ALLENDE NREUDA
ALLEE JULES FERRY
95140 GARGES-LES-GONESSE.

4 thoughts on “பிரான்சு கம்பன் கழகப் பொங்கல், மு.வ. நூற்றாண்டு விழாக்கள்.

  1. நிகழ்ச்சியை படிக்கவே மனநிறைவாக இருக்கிறது. எனக்கு ஒரு வழக்கம் உண்டு. மு.வ. அவர்களின் ‘நல்வழி’ நூலை மாணவர்களுக்கு பரிசளிப்பது.

  2. அன்புள்ள நண்பர் இன்னம்பூரான் அவர்களுக்குவணக்கம்என் பேராசிரியர் முனைவர் மு.வ அவர்கள் நூலை மாணவர்க்குப் பரிசளிக்கும் வழக்கம் மிக நல்ல வழக்கமே.குறிப்பாக. அக்காலத்தில் அவர் நூலைப் படித்த இளைஞர்கள் நல்லொழுக்கத்தில் நிலை நின்றனர். நின்றோம் 
    ஏராளமான இளைஞர்கள் அவரைக் காணாமலே அவர் மேல் பேரன்பு செலுத்தினர். அப்படி ஒரு நிலை வேறு எந்தப் பேராசிரியர்க்கும் கிடைத்ததாகத் தெரியவில்லை. இதனை அவரிடம் குறிப்பிட்டு இருக்கிறோம். மெல்லச் சிரித்துக்கொள்வாரே தவிரக் கர்வம் கொள்ள மாட்டார்! ‘பணியுமாம் என்றும் பெருமை’ – வள்ளுவர் வரிக்கு எடுத்துக்காட்டு அவரே!அன்புடன்பெஞ்சமின்

  3. அன்புள்ள நண்பர் பெஞ்சமின்னுக்கு,ஏராளமான இளைஞர்கள் அவரைக் காணாமலே அவர் மேல் பேரன்பு செலுத்தினர். அப்படி ஒரு நிலை வேறு எந்தப் பேராசிரியர்க்கும் கிடைத்ததாகத் தெரியவில்லை.~ ஆம். உண்மை. என்னுடைய மானசீக ஆசான் திரு.வி.க. அவர்களுடைய பிரதான சீடப்பிள்ளை அல்லவா, பேராசிரியர் மு.வ. அவர்கள். சரி. ஒரு நினைவை பகிர்ந்து கொள்கிறேன். போன நூற்றாண்டின் ஐம்பதுகளில், ஒரு எம்.ஏ. பாஸ் செய்தால், மற்றொன்று தனியாக படித்து எழுதலாம். நான் ஐயாவிடம் போய், உங்கள் ஆசியில் தமிழ் எம்.ஏ. பாஸ் செய்துவிடுவேன். நீங்கள் தான் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்ய மார்க்கபந்துவாக இருக்கவேண்டும் என கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘நீ மாற்றல் வந்து வட இந்தியா போய்விடுவாய்.’ என்று கேலி செய்தார். அவ்வாறே நடந்தது. அவருடைய சீடர் முனைவர். அ.நாகலிங்கம் என் நண்பர். அன்புடன்,இன்னம்பூரான்

  4. வணக்கம். டாக்டர் முவ தொடர்பான படங்கள் குறும்படம் இருப்பின் மின்னஞ்சல் செய்யவும். அவரின் நூற்றாண்டு மலரை மின்னஞ்சல் செய்தால், மிக நன்று. மலேசியாவில் விழா எடுக்க இவை உதவியாக இருக்கும்-மனஹரன், மலேசியா

Leave a Reply

Your email address will not be published.