பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன 1000 பறவைகள்!
இனிமையான எதிர்காலத்தை நோக்கிச் சிறகடிக்கும் குஞ்சுகள்! – கண்காட்சி.
சேவாலயா மற்றும் இரசிய அறிவியல் மற்றும் கலாச்சார மையமும் இணைந்து சென்னையில் 20-02-2012 அன்று இரசிய தூதரகத்தில் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது. தன்னார்வலர் சார்லட் சாப்மேன் , இங்கிலாந்திலிருந்து வந்தவர், 1000 மேல் நிலைப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வீணாகிப்போன பிளாஸ்டிக் புட்டிகள மற்றும் வீணான காகிதங்கள் மூலம் பறவைகள் செய்து காட்சியாக்கினர்.
இணைத் தூதர் மற்றும் இரசியக் கூட்டமைப்பின் இயக்குனர் திரு விளாடிமிர் மர்ரி அவர்களின் தலைமையில், சேவாலயாவின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலருமான திரு முரளீதரன் அவர்கள் வரவேற்புரை மற்றும் செயல்திட்ட விளக்க உரையுடன் மற்றும் சேவாலயா குழந்தைகளின் பறவைகளின் செய்முறை விளக்கங்களுடன் விழா இனிதே நடந்தேறியது.