தமிழ்த்தேனீ

 

ஒரு உயிரை விதைத்ததால் ப்ரபஞ்சம் வளர்ந்தது

வாழைப் பயிரை நட்டதால் அதன்கீழ்

வாழையடி வாழையாய்க் குருத்து வளர்ந்தது.

ஒரு மரம் நட்டால் ஓங்கிப் பரந்து தோப்பாய் ஆகுது

உயர்ந்தே நிமிர்ந்து ஓங்கி வளர்ந்து குலைதள்ளி

இயற்கையாய்க் காயும் கனியும் காய்த்துப் பழுக்குது

ஒரு விதை நட்டதால் பூமியும் பிளந்தது

பூகம்பம் வெடித்தது விதையுண்ட நீரினால்

விருட்சமாய் வளர முளைவிட்டு வளர்ந்து

புதையுண்ட வேர்கள் உள்ளே நுழைந்தது.

 

 மண்ணில் ஊன்றித் துளைத்தது, ஆழ்கடல் நீர்தேடி

அலைந்து திரிந்தது, ஆழமாய் வேரோடித் துளைந்து

வளர்ந்து பாதாளப் பயணம் போனது.

விதை ஒன்றை நட்டால் விருட்சமாய் ஆகுது,

சதைகொண்ட தாவரம் மண்ணில் வளருது

இது பூகம்பம் அல்ல பூக்கம்பம் வெளியே தெரிந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பூக்கம்பம்

  1. பூக்கம்பம் நிமிர்ந்து வளர நேயம் என்ற எரு இடவேண்டும் என்பதை அழகாக  சொல்லியிருக்கிறீர்கள், தமிழ்த்தேனி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *