கடன் காலம்
பிச்சினிக்காடு இளங்கோ
எல்லோரிடமும் இருக்கிறது
கணிசமாக
காட்டிக் கொள்வதில்லை
வானம் போல்
ஒரு
வாய்ப்பு வந்தபோது
வாய்ப்பாக எண்ணி
நடந்து கொள்ளும் தருணத்தில்
விழுந்து பறிக்கிறது
சராசரிகளின் பார்வை
சராசரிகளே
சுற்றும் முற்றும்
அதிகம் இருப்பதாலும்
அறவே இல்லாததாலும்
எப்படி எதிர்பார்க்க முடியும்
அந்த உன்னதத்தை
ஒரு போர்க்களம்
மவுனமாய் நடந்து கொண்டிருந்தாலும்
நம்மையும் மீறி
முடிவெடுத்து விடுகிறது மிச்சங்கள்
எல்லைக்குள் நின்றாலும்
அத்து மீறியதாகவே
அர்த்தப்படுத்துகிறது
அத்தனையும்
வரம்பு மீறாமைக்கும்
நட்பின் அழகுக்கும்
இடமில்லாத அகராதியாய்
ஆகி விட்டது அனைத்தும்
என்ன செய்வதென்று
வெதும்பாமலும்
என்ன செய்தாலும்
தீராது எனப்
பொருள் கொண்டும்
கடன் கட்டுதலாய்க்
கழிகிறது காலம்
படத்திற்கு நன்றி:http://free-beautiful-desktop-wallpapers.blogspot.in/2011/05/beautiful-acrylic-art-painting.html
கடன்கால எளிமை, அருமை