மற்றுமொரு மெகா ஊழலா…..?
தலையங்கம்
2ஜி அலைக்கற்றை ஊழலை விட அதிகமான தொகையாக சுமாராக 10 இலட்சம் கோடி அளவிற்கு நிலக்கரியில் மாபெரும் ஊழல் நடந்திருப்பதாக கணக்கு தணிக்கைத் துறையிலிருந்து ஆரம்ப தகவல் அறிக்கை வந்துள்ளது. இந்த அறிக்கையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சுமார் 100 நிறுவனங்களும், மின்சாரம், சிமெண்ட், உருக்கு போன்ற பொதுத்துறை நிறுவனங்களும் பலன் அடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை கலக்கப் போகும் அடுத்த அறிக்கையாக இது இருக்கப் போகிறது என்பதே மக்களின் அதிர்ச்சியாக உள்ளது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் இப்பிரச்சனைகள் குறித்து எதிர்கட்சியினர் பேசினர். நம் நாட்டின் வரலாற்றின் மிகப்பெரிய ஊழலாக இது இருக்கும் என கருதப்படுகிறது. அனல்மின் நிலையங்களுக்கு, மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை அரசிற்கு சொந்தமான 155 நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெட்டி எடுத்து ஏலம் விடப்படுவது வழக்கம். கனிம வளம் நாட்டின் முக்கியமான சொத்து. கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில், இது போன்று ஏலம் விடப்படாததன் காரணமாக அரசாங்கத்திற்கு 10. 6 இலட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை ஜெனரல் (சி.ஏ.ஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படியே, வேலிகளே பயிரை மேய்ந்து, மேய்ந்து நாட்டின் முன்னேற்றத்தை தடை செய்வதோடு, உலக அரங்கில் மதிப்பையும் இழந்து கொண்டு வருவதும் வேதனைக்குரிய செயலாகும்….
ஒரு சோகம். ஒரு மகிழ்ச்சி. வல்லமையின் தலையங்கத்தில் ஆடிட் ரிப்போர்ட் உலா வருவது, யான் எழுதி வரும் ‘தணிக்கையென்றதொரு முட்டுக்கட்டை’ தொடரின் தொடர் போல் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருவது, இயல்பே. சோகம் யாதெனில், இந்த மாதிரியான துஷ்பிரயோகங்களை, குறைந்தது நாற்பது வருடங்களாக, ஆடிட்டர் ஜெனெரல் அடித்துச்சொன்னது, யார் காதிலும் விழவில்லை. அதை விடுங்கள். தான்பாத் நிலக்கரி தலை நகர். நிலக்கரி கபளீகரக்கும்பல்கள் கொள்ளைக்காரர்கள்; கொலைகாரர்கள். சிலர் மக்கள் பிரதிநிதிகள். ஆடிட்டர்களுக்கு தினந்தோறும் கொலை மிரட்டல்/ பெண்ணாசை, பொன்னாசை தீர்க்கிறோம் என்று வாக்குறுதிகள்! ராணிகஞ்ச் என்ற ‘நெருப்பு நகரம்’ போயிருக்கிறீர்களோ? மக்கள் உயிருடன் ஃப்ராடு வேலை. ஜம்ஷெட்பூர் டாட்டா இரும்பாலை தவிர, மற்ற தனியார் கம்பெனிகள், முன்னும்,பின்னும் அடித்த கொள்ளையில், ஐம்பது வருட பட்ஜெட் வருமானம் ஸ்வாஹா! அங்கு பேரலல் கவர்மெண்டு. இது முன்னிறுத்திய வல்லமை ஆசிரியருக்கு நன்றி.
மன்னிக்கவும். பாதி அடித்த கமெண்ட் பறந்து சென்றது. நான் பட்ட கவலை, இது இறுதி அறிக்கை இல்லை என்பதே. ஆடிட்டர் ஜெனெரலின் அறிக்கை, கீழே: அத்துடன், இது நிற்காது. இந்த பிரச்னை 2ஜியிலும், ரிலையன்ஸ் கேசிலும் ஏற்பட்டது. குறிப்பிட்ட விஷயங்களில், தெளிவுக்குக் காத்திருப்போம். மற்றபடி, நான் சொன்னது எல்லாம், மிகையல்ல. ஆசிரியரின் தலையங்கமும் ஊடக அடிப்படையில் தான்.
இன்னம்பூரான்*In the rarest of rare rebuttals, the Comptroller and Auditor General of India (CAG) on Thursday strongly contradicted reports in the media that it had pointed to Government having lost Rs. 10.7 lakh crore by not auctioning coal blocks terming it as “exceedingly misleading’’ virtually ruling out any loss to the exchequer.The issue of massive loss of Rs. 10.7 lakh crore caused to the exchequer raised a storm earlier in the day with both Houses of Parliament witnessing uproar by the Opposition forcing adjournment of the both Rajya Sabha and Lok Sabha during Question Hour demanding a transparent inquiry into the entire scam.Later, in a letter to Prime Minister Manmohan Singh, the CAG said: “With reference to the lead story published in the Times of India today titled “Government lost Rs. 10.7 lakh cr by not auctioning coal blocks: CAG,’’ among other things, it clarified that in the extant case the details being brought out were observations which are under discussion at a very preliminary stage and do not even constitute our pre-final draft and hence are exceedingly misleading.It further states: “Pursuant to clarification provided by the Coal Ministry in exit conferences held on February 9 and March 9, we have changed our thinking …. In fact it is not even our case that the unintended benefit to the allocatee is an equivalent loss to the exchequer. The leak of the initial draft causes great embarrassment as the Audit Report is still under preparation. Such leakage causes very deep anguish,’’ according to the excerpts of the letter released by the PMO.The leaked report on allotment of coal blocks quoted CAG having estimated a windfall gain of Rs. 6.31 lakh crore (Rs. 3.37 lakh crore for PSUs and Rs. 2.94 lakh crore for private sector) based on the prices prevailing during the year of allocation on constant cost and price basis and as on March 31, 2011. The amount at current prices was worked out to Rs. 10.67 lakh crore (PSUs – Rs. 5.88 lakh crore and private parties – Rs. 4.79 lakh crore), according to the report quoting CAG draft report.Interestingly, the Coal Ministry had stated in its reply in June 2004 that there was a substantial difference between the price of coal supplied by Coal India Ltd (CIL) and the cost of coal produced through coal blocks allocated for captive mining and as such there was windfall gains to the allocattees, part of which the government wanted to tap through competitive bidding.Officials in the Coal Ministry said that the exit conferences held by CAG had led to clarification on a number of issues pertaining to windfall gains and that had led to change in many of the observations including the one pertaining to the loss to the exchequer. “The country has been following the nomination policy from 1993. Even during the time of NDA regime, coal blocks were given on nomination basis. The UPA government in 2004 changed the allocation method to bring transparency by advertising the blocks and then inviting applications for the same before allotments by a scrutinising committee were made. There was no question of any auctioning process being followed as no provision for the same existed in the law. There is nothing to hide as even allocations have been made to private parties as well as PSUs,’’ a senior official remarked.( ஹிந்து அப்டேட்: 22 03 2012)