நாளாம்..நாளாம்
செண்பக ஜெகதீசன்
எங்கும் சாந்தி நிலவுது
ஏற்றத் தாழ்வு மறையுது,
மங்கல ஒலிதான் கேட்குது
மாநில ஒற்றுமை ஓங்குது,
சங்கச் சண்டைகள் தீருது
சகலவும் மலிவாய் ஆனது,
பொங்கும் இன்பமே காணுது
பாரு ஏப்ரல் ஒண்ணிது…!
போட்டி பொறாமை போனது
பொழுதெலாம் மின்னொளி யானது,
வாட்டும் வறுமை தீர்ந்தது
வளமெலாம் வந்து சேர்ந்தது,
ஓட்டும் ஏய்ப்பும் நின்றது
ஒற்றுமை எல்லாம் வென்றது,
நாட்டில் நலமே நிலைத்தது
நாளாம் ஏப்ரல் ஒண்ணிது…!
படத்திற்கு நன்றி:http://open.salon.com/blog/kikstad/2011/03/31/never_trust_a_pop_culture_story_on_april_fools_day