அரசியல் கட்சிக்கும் பெருமை….! அரசியல் தலைவருக்குமே பெருமைதானே….!

 

 

சித்திரை சிங்கர்
சென்னை
02.04.2012

 

இன்றைய இந்தியா எங்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது யாராலும் யூகிக்க முடியவில்லை.மத்தியில் ஒரு கட்சி ஆட்சி இல்லாத நிலைமையினால் அரசியலில் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தங்களின் தகுதிக்குத் தக்கவாறு இன்றைய பிரதம மந்திரியை ஒவ்வொரு விசயத்திலும் சுயமாக செயல்படுத்த விடாதவாறு மிரட்டி அவரவர்களின் தேவையினை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள் மேலும், இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் அவரவர்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களே என்பது சமீபத்தில் நடந்த இரயில் கட்டண உயர்வு ரத்து, ரயில்வே மந்திரி மாற்றம் போன்றவைகள் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்படி ஒரு சாதாரண முடிவுகளை சுயமாக எடுத்து செயல்படுத்த முடியாத நிலையில் ஒரு ரயில்வே மந்திரி இருக்கும் போது மத்திய அரசில் உள்ள மற்ற மந்திரிகளின் செயல்பாடுகளும் அவரவர்கள் கட்சித் தலைமையின் வழி காட்டுதலின்படிதானே இருக்கும் இதற்கு எந்த மாநிலமும் எந்த அரசியல் கட்சிகளும் விதிவிலக்கல்ல என்பதே உண்மை. இப்படிப்பட்ட நிலையில், நாட்டை பேசாமல், இனி தேர்தலில் ஜெயிக்கும் “கட்சியின் தலைவர்” மாநிலமென்றல் முதல்வர் பதவியினையும், மத்தியில் என்றால் பிரதம மந்திரி பதவியினையும் அலங்கரித்து கொண்டு மாநில…. மத்திய… அரசு அதிகாரிகள் பணியாளர்களைக் கொண்டு ஆட்சி நடத்தலாம். இதனால மாநில மத்திய அமைச்சர்களின் சம்பளம்… மற்றும் அலவன்சு செலவுகள் மிச்சப்படுத்தப்பட்டு நாட்டுக்கே பயனுள்ளதாக செலவு செய்யலாம். அரசுக்கு செலவுகள் ரொம்ப குறையும். எப்படியும் அரசியல் கட்சி தலைமையின் முடிவுகள்தான் அமைச்சர்கள் வழியாக வெளிவருகின்றது அது இனி நேரிடையாகவே வெளி வந்தால் அந்த அரசியல் கட்சிக்கும் பெருமை….! அந்த அரசியல் தலைவருக்குமே பெருமைதானே….!

.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க