சங்கரா தொலைக்காட்சியின் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்!

0

 

செல்வரகு

நவக்கிரஹம்

தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சங்கரா டிவியில் முற்பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள உன்னதமான நிகழ்ச்சி நவக்கிரஹம்.


மனித வாழ்க்கையே நம்பிக்கையின் அடிப்படையில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கை நம்மிடையே ஆன்மீகம், ஜோதிடம், என பல வழிகளில் வியாபித்துள்ளது. அந்த வகையில் ஜோதிடத்தின் முக்கியக் கூற்றாக விளங்கும் ராசிகளின் நிலையை நிர்ணயிக்கும் அற்புத மற்றும் அபூர்வ சக்தி பெற்ற நவக்கிரஹங்களின் சன்னதிகளுக்கு நேயர்களை அழைத்துச் சென்ற அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் நவக்கிரஹங்கள் அமர்ந்து அருளாட்சி செய்து வரும் ஒன்பது ஆலயங்களின் அற்புத தொகுப்பு இடம்பெற உள்ளது. வீட்டிலிருந்தபடியே ஒரு மணி நேரத்தில் நவக்கிரஹ தரிசனம் செய்திட இந்நிகழ்ச்சியின் மூலம் அருமையானதொரு வாய்ப்பை ஸ்ரீ சங்கரா டிவி வழங்க உள்ளது.

நேயர்கள் இந்த அரிய நிகழ்ச்சியைக் கண்டு களியுங்கள், நவக்கிரஹங்களின் அருளினைப் பெறுங்கள்.

உலகம் அழியுமா?

உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள வித்தியாசமான சிறப்பு நிகழ்ச்சி “பிரளயம்”

2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்த வித குறிப்பும் இல்லாமல் நிறைவுற்றிருக்கும் மயன் காலண்டர் தற்போது உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. 2012 க்குப் பிறகு உலகின் நிலை என்னவாகும்? பேரழிவு ஏற்பட்டு நம்மால் எண்ணிப்பார்க்க இயலாத நிலைக்கு உலகம் தள்ளப்படுமா? அல்லது இவை வெறும் வதந்திகளா? என்பதைப் பற்றிய பலகோண ஆராய்ச்சியின் அரங்கேற்றமாக இந்நிகழ்ச்சி உலா வர உள்ளது.

பிரபல சிற்பக்கலை ஆராய்ச்சியாளர் திருமதி பொன்னி செல்வ நாதன், சமஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் ஆன்மீக சிந்தனையாளர் திரு சேஷாத்ரி நாத சாஸ்திரிகள் மற்றும் பலதுறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற, பல அரிய மற்றும் அற்புத தகவல்களுடன் இந்நிகழ்ச்சி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.

 

Thanks & Regards

S.Selvaragu-PRO (Film & Channel)
9003024334
9382209649
8015765631
selvaragu.s.pro@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *