சீனி குலசேகரன்

மூத்த இலக்கிய கர்த்தா தி.க.சி. அவர்களின் 88 வது பிறந்தநாள் விழா, இலக்கிய அன்பர்களின் சந்திப்பாக அவரது 21-ஈ, சுடலைமாடன் கோவில் தெரு வளவு வீட்டு முற்றத்தில் வைத்து மிக எளிமையான முறையில், கடந்த 31-03-2012 அன்று நடந்தேறியது.

எழுத்தாளர் கழனியூரன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியினை தொகுத்தளித்தார்.

 

பேராசிரியர் அறிவரசன் தலைமையேற்று வாழ்த்துரை வழங்கியோடு, சென்னையச் சேர்ந்த எழுத்தாளர் தி.சுபாஷிணி எழுதிய ‘ தந்தைமைத் தவழும் வளவு வீடு ‘ நூலினை வெளியிட , தி.க.சி. அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

ஆய்வாளர் செ.திவான், தொழிற்சங்கத் தலைவர் காசி விஸவநாதன், டாக்டர் அகமது கான், எழுத்தாளர் தி.சுபாஷிணி , உழைப்பாளி பால் முகம்மது , பத்திரிக்கையாளர் நெல்லை பாபு, ஒவியர் குணா, குள்ளக்காளிபாளையம் பாலு, கிருஷி, பொன் வள்ளிநாயகம், வே,முத்துக்குமார், சீனி குலசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

தி.க.சி. அவர்களின் வீட்டு இல்லப் பணியாளர் தோழி.காந்திமதி மற்றும் வளவு வீட்டு சகோதரி திருமதி.சுந்தரி ஆகியோர் தி.க.சி அவர்களின் பண்புநலன்கள் குறித்து பேசியது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது.

விழாவின் நிறைவாக தி.க.சி அவர்கள் ஏற்புரையாற்றினார்கள். எழுத்தாளர் கழனியூரன் நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் டாக்டர்.அகமது கான் எழுதிய நூல்கள் அன்பளிப்பாகவழங்கப்பட்டன.

தி.க.சி. அவர்களின் தினசரி உணவு உபசரிப்பாளர் திரு.பரமசிவன் அவர்களின் அறுசுவை விருந்துணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது .

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *