சுயநலத்தின் சுற்றுப் பாதை

குமரி எஸ். நீலகண்டன்
Kumari_S_Neelakandan
ஓடும் பேருந்தில்
தொங்கியும் சாய்ந்தும்
சரிந்தும் வியர்த்தும்
காற்றைப் பிழிந்து
வியர்வை மிதந்த
கனத்த கூட்டத்தில்

இருக்கையை விட்டு
எழுவதுபோல் எத்தனிக்கும்
அவனைச் சுற்றி
மந்தையாய்க் குவியும்
சுயநலம்.

அந்த இடத்தைப் பிடிக்க
கைகள், கம்பிகளைப் பற்ற
வாள்களாகச்
சண்டையிடும்.

அவனின் பாவனை அசைவில்
நிற்பவர்களின் ரத்தம்
ஒடுங்கிய ஓடைகளில்
உயர் அழுத்தத்தில் பாயும்.

அவன் எழாத போது
பெய்யா மழையால்
பொய்யாய்க் கலையும்
கரு மேகமாய்
அலைபாயும் அடுத்த
இடத்திற்காய், சுயநலம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுயநலத்தின் சுற்றுப் பாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *