விற்பனையாளர்களே
பிச்சினிக்காடு இளங்கோ
ஏதோ ஒன்றை
விற்பனை செய்யவே
வந்திருக்கிறோம்
ஏதோவொன்றை
விற்பனை செய்து கொண்டிருக்கிறோம்
ஒரு சிலர் மட்டுமே
ஒன்றுக்கும் மேல்
விற்பனை செய்கிறார்கள்
அதிக விற்பனையில்
யார் என்பதே
வாழ்க்கையின் வண்ணமாயிருக்கிறது
யார்
சிறந்த விற்பனைக்காரர்
என்பதே எண்ணமாயிருக்கிறது
அழகும் அறிவும்
மதமும் கடவுளும்
விற்பனைப் பொருள்கள்தாம்
அரசியலும் ஆத்திகமும்
அதை மறுக்கும் நாத்திகமும்
விற்பனைக்குரியவைதாம்
கற்பனையும்
விதிவிலக்கல்ல
நீங்களும் எதையோ
விற்பனை செய்கிறீர்கள்
இல்லையெனில்
உங்களை யாரோ
விற்பனை செய்கிறார்கள்
அவ்வளவுதான்.
படத்திற்கு நன்றி:http://www.infobarrel.com/Media/Price_tag