உறவுகள்
ஜெ.ராஜ்குமார்
மூன்றெழுத்து மந்திரமாய் ‘அம்மா’
மூச்சுக் கொடுத்து ஈன்றெடுப்பாள் பிள்ளையை !
பிள்ளைப்பேறு பெறுவாள் –
பேர் சொல்லும் பிள்ளை என
ஊர் சொல்லும் போது…!
ஈன்றெடுத்த காரணத்தால்
தன் மகனைக் காத்தருள்வாள்…
தனக்கெனத் துயர் வந்தாலும்
மனக்கதவில் புதைத்து விட்டு
மனம் திறந்து செயல்படுவாள் –
மகன் வளரத் தன் உயிரைப் பணயம் வைப்பாள்…!
வரமென கிடைத்ததாய் ‘அப்பா’
வாழ்க்கைத் தரம் கூட்ட
வந்த ஓர் கடவுள்!
தன் பிள்ளை படித்திடவே
தன் உழைப்பைத் தாரை வார்ப்பார்!
தனக்குச் சோர்வெனினும் வெளிக்காட்டாமல்
தன் மகனுக்குச் சுறுசுறுப்பைக் கற்பிப்பார்
தன்னம்பிக்கையை ஊட்டுவார்!
குடும்பம் செழித்திடவே
தாலி போல் வேலியாய் இருப்பார்…!
அப்பா அம்மாவின் இணைப்பாய் ‘மகன்’
மழலை வரை தாயின் பேச்சும்
வளரும் வரை தந்தையின் பேச்சும்
மணந்தவுடன் மனைவியின் பேச்சும்
கேட்டுக் கேட்டு வளர்வான்…
பாதி வயதாகி விடும் –
அவன் பக்குவம் அடைவதற்கே…!
படத்திற்கு நன்றி:http://www.feelgooder.com/how-your-family-impacts-your-relationships